கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Karthigai Deepam Nei Appam Recipe In Tamil: கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக இந்நாளில் முருகப்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் பிடித்தமான பல்வேறு இனிப்புகளைப் படைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடிய முக்கியமான பிரசாதங்களில் ஒன்று தான் நெய் அப்பம்.

Karthigai Deepam Nei Appam How To Make This Appam In 15 Minutes

இந்த நெய் அப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பாகும். இந்த நெய் அப்பத்தை பலவாறு செய்வார்கள். அதில் ஒரு எளிய முறை தான் ரவை மற்றும் கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய நெய் அப்பம். இந்த அப்பத்தை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு இந்த நெய் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சிறிது
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* நறுக்கிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து கட்டிகளின்றி கலந்து மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த ரவை கலவையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் சிறிது நெய்யை ஊற்றி, கலந்து வைத்துள்ள கலவையை குழிகளில் ஊற்றி, குறைவான தீயில் வைத்து, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான நெய் அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 20, 2026, 22:30 [IST]
Desktop Bottom Promotion