Latest Updates
-
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்!
Budhaditya Rajyog On 02 December 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் டிசம்பர் 02 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார்.

புதன் செவ்வாயின் ராசிக்குள் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் பயணித்து வருகிறார். இதனால் விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். முக்கியமாக தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இப்போது டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நீண்ட கால ஆசைகள் திடீரென்று நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். செல்வாக்குமிக்கவர்களுடனான உறவு கிடைக்கும். இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் மீன ராசிக்காரர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
