1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பழங்கால பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் விடப்படுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய ஏலம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் அந்த பொருளுடன் தொடர்புடைய கடந்த கால வரலாறாகும். புகழ்பெற்ற கலைஞரான வின்சென்ட் வான் கோ தனது வாழ்க்கையின் கடைசி காலத்தில் உருவாக்கிய ஒரு ஓவியம், நியூயார்க்கில் கண்ணைக் கவரும் வகையில் 190.4 மில்லியன் டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் 1,800 கோடி) விற்கப்பட்டு, அந்தப் புகழ்பெற்ற கலைஞரின் அனைத்து கடந்த கால ஏல சாதனைகளையும் மிஞ்சியுள்ளது.

Van Gogh Painting Sold for Record 190 Million

ஆனால், அந்த பிரமிக்க வைக்கும் விலையின் பின்னால், இரண்டாம் உலகப் போரின் மோசமான நாட்களில் நிகழ்ந்த ஒரு வியத்தகு, கடைசி நிமிட சட்டரீதியான தீர்வு உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது பல தசாப்த காலக் கொந்தளிப்புகளைத் தாங்கி, 'ஷாடெய்னியர்ஸ் என் ஃப்ளோர்ஸ்' ஓவியம் எவ்வாறு கலை வரலாற்றில் இடம்பிடித்தது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடைசி நேர ஒப்பந்தம்

புதன்கிழமை நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏலம், அந்த ஓவியத்தின் வரலாறு மற்றும் கடந்த காலம் குறித்த ஒரு சர்ச்சையை கடைசி நேர ஒப்பந்தம் தீர்த்து வைத்த பின்னரே நடைபெற்றது. நாஜிக்களின் எழுச்சிக் காலத்தின் போது, அவர்களின் அழுத்தத்தின் காரணமாக அந்த ஓவியம் முதலில் விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ஏலம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, விற்பனையாளர்களான பிளாக்கியர்-அரியேட்டா குடும்பத்திற்கும், கடந்த காலத்தில் அந்த ஓவியத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்த ஜெர்மானிய ஃபிஷர் குடும்பத்தின் வாரிசுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாஜி ஆட்சியின் கீழ் அந்த குடும்பத்தின் பிரிண்டிங் தொழில் கடுமையான நிதி இழப்புகளைச் சந்தித்ததால், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஆம்ஸ்டர்டாமில் அந்த ஓவியம் விற்கப்பட்டதாகக் கூறி, ஃபிஷர் வாரிசுகளின் வழக்கறிஞர்கள் Sotheby நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அந்த ஓவியத்தின் சிக்கலான நாஜி கால வரலாற்றையும், ஹோலோகாஸ்ட் காலத்தில் ஃபிஷர் குடும்பம் அனுபவித்த துன்பங்களையும் கருத்தில் கொண்டு, இரு குடும்பங்களும் பரஸ்பரம் திருப்திகரமான ஒரு தீர்வை எட்டியதாக Sotheby's நிறுவனம் குறிப்பிட்டது.

ஓவியத்தின் வரலாறு

புகழ்பெற்ற ஓவியரான வான் கோக், தனது வாழ்நாளின் கடைசி இரண்டு மாதங்களில், 1890-ஆம் ஆண்டில் 'ஷாட்டேனியர்ஸ் என் ஃபுளூர்ஸ்' (Châtaigniers en fleurs) என்ற ஓவியத்தை வரைந்தார். அந்த காலகட்டத்தில் உருவான, மிக முக்கியமான படைப்புகளில் இது ஒன்று என்று சோத்பிஸ் (Sotheby's) நிறுவனம் குறிப்பிடுகிறது. ஏலத்திற்கு முன்னதாக, 'பிளாக்கியர்-அரியேட்டா' (Blaquier-Arrieta) தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த இந்த ஆயில் பெயிண்டிங், சுமார் 180 மில்லியன் டாலருக்கு விற்பனையாகலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்கு ஏலம் போனது. இந்த ஓவியத்தை வாங்கிய புதிய நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த ஓவியம் யாரிடமெல்லாம் இருந்தது?

1890-ஆம் ஆண்டு முதல் இந்த ஓவியம் யாரிடம் இருந்தது என்பதற்கான ஆவணங்களை Sotheby's நிறுவனம் தொகுத்துள்ளது. புகழ்பெற்ற ஜெர்மன் பதிப்பாளர் சாமுவேல் ஃபிஷர், 1909-ஆம் ஆண்டில் இதை முதன்முதலில் வாங்கினார். 1934-இல் அவர் மறைந்த பிறகும், இந்த ஓவியம் அவரது குடும்பத்தினரிடமே இருந்தது. 1932 அல்லது 1933-ஆம் ஆண்டுகளில் ஆம்ஸ்டர்டாமில் இருந்த பால் காசிரரிடம் (Paul Cassirer) ஒப்படைக்கப்பட்ட இந்த ஓவியம், பின்னர் 1936-இல் பாரிஸில் இருந்த ஹென்றிட் மற்றும் மார்செல் காப்ஃபெரர் தம்பதியினரிடம் சென்றது. அதன் பிறகு மேலும் நான்கு உரிமையாளர்களைக் கடந்து, 1975-ஆம் ஆண்டில் பிளாக்கியர் (Blaquier) குடும்பத்தினர் இதை பெரும் விலை கொடுத்து வாங்கினர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களிடமிருந்த இந்த ஓவியம் தற்போது மிகப்பெரிய விலைக்கு மற்றொருவருக்கு விற்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, November 21, 2026, 10:01 [IST]
Desktop Bottom Promotion