Latest Updates
-
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்... -
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
Achari Potato Fry Recipe in Tamil: காய்கறிகளில் பெரும்பாலானோரின் விருப்பமான காய்கறி என்றால் அது உருளைக்கிழங்காகத்தான் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் உருளைக்கிழங்கு பிரியர்கள் தானா? அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் உருளைக்கிழங்கை சமைப்பீர்களா?

ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு வறுவல் சாப்பிட்டு போரடித்திருந்தால் இந்த ராஜஸ்தான் ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவலை ஒருமுறை செஞ்சு பாருங்க. இந்த ஆச்சாரி உருளைக்கிழங்கு வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஏன் சப்பாத்திக்கு கூட அட்டகாசமாக இருக்கும். மேலும் இதில் பன்னீர் சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு அட்டகாசமான ஆச்சாரிஉருளைக்கிழங்கு வறுவலை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆச்சாரி உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ உருளைக்கிழங்கு
- 200 கிராம் பனீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- ½ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள்
- ¼ கப் கெட்டியான தயிர்
- ¾ கப் அரைத்த தக்காளி
- ¼ ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மாங்காய் பொடி
- ½ ஸ்பூன் மாங்காய் ஊறுகாய்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
மசாலா அரைக்க:
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்
- 2 டீஸ்பூன் மல்லி விதைகள்
- 1½ டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 சிட்டிகை வெந்தயம்
- ¼ டீஸ்பூன் பெருங்காயத் தூள்
செய்முறை:
- உருளைக்கிழங்குகளைத் தோலுரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். அவற்றை வேகவைக்கவும், அதே சமயம் குழைந்துவிடாமல் இருக்கும்படி வேகவைக்கவும்.
- ஒரு வாணலியில் வர மிளகாய், மல்லி விதைகள், சோம்பு, சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில், அவை மொறுமொறுப்பாகி வாசனை வரும் வரை வறுக்கவும். நன்கு ஆறவிட்ட பிறகு, பெருங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வேகவைத்து ஆறவைத்த உருளைக்கிழங்குகளைச் சேர்க்கவும். அதிக தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை, லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.இதேபோல பன்னீரையும் வறுத்து, அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
- ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, அதில் சீரகத்தைச் சேர்க்கவும். சீரகம் பொரியத் தொடங்கியதும், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மாங்காய்ப் பொடி மற்றும் ஆச்சாரி மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மெதுவாகக் கிளறி, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இது கெட்டியான விழுதாக மாறும் வரை 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும்.
- 1 கப் சூடான சுடுநீரை ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு, வறுத்து வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைச் மெதுவாகச் சேர்க்கவும். மூடி வைத்து, குறைந்த தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் சமைக்கவும்; கலவையின் மேல் எண்ணெய் மிதக்கத் தொடங்கும் வரை சமைக்கவும்.
- இறுதியாகப் பன்னீரைச் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 1 முதல் 2 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, சுவை பார்த்துத் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- இறுதியாக மாங்காய் ஊறுகாயைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். இதை சாதம், பூரி, நான் அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
