December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?

December 2026 Horoscope: 2026 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் வரப்போகிறது. கண்ணை மூடி திறப்பதற்குள் 2026 ஆம் ஆண்டு முடியப்போகிறது. சில மாதங்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும், அதேசமயம் சில மாதங்கள் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஜோதிடத்தின் படி இந்த மாற்றங்களுக்குக் காரணம் அந்த மாதத்தில் நிகழ்ந்த கிரக மாற்றங்களாக இருக்கும். கிரகங்கள் ஒருவரின் ராசிக்கு சாதகமான இடத்திற்கு வரும்போது ஆச்சரியங்களும், பாதகமான இடத்திற்கு வரும்போது அதிர்ச்சியும் நமக்கு ஏற்படுகிறது.

December 2026 Horoscope Zodiac Signs Who Will Shine in December 2026

டிசம்பர் மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகிறது. டிசம்பர் மாத ஜோதிட கணிப்புகளின் படி, டிசம்பர் மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். டிசம்பர் மாதம் முழுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல அதிசயங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

டிசம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, வேலையில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் பதவி உயர்வுகள், தலைமைப் பொறுப்புகள் அல்லது தங்கள் துறையில் மேம்பட்ட அங்கீகாரத்தைப் பெறக்கூடும்.

கடந்த காலத்தில் செய்த வேலைகளுக்கான அங்கீகாரம், குறிப்பாகப் போட்டி நிறைந்த துறைகளில், அவர்களின் வருவாய் ஈட்டும் திறனையும் அதிகரிக்கக்கூடும். இந்த மாதத்தில், பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மிதுன ராசியினர் பயனடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிம்மம்

கேது சிம்ம ராசியை விட்டு வெளியேறுவதால் இது அவர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. குருவின் வக்ர நிலை அவர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அவர்களுக்கு செல்வாக்கு, சமூக அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்தை, குறிப்பாக அரசு சார்ந்த துறைகளில் வெற்றியை அளிக்கக்கூடும். சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பாராத லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதோடு, புதிய சொத்துக்களையும் வாங்கலாம்.

இந்த மாதம் நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்கலாம் அல்லது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு முக்கியமான நபரின் நட்பைப் பெறலாம். மேலும், இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் சில சுப நிகழ்வுகள் நடைபெறலாம். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்கள் கடின உழைப்பிற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கக்கூடும். காதல் மற்றும் கல்வி விஷயங்களில், சனியின் தாக்கம் உங்களுக்கு நல்லிணக்கத்தைக் கொடுக்கும். பேச்சில் துணிச்சல் அதிகரிக்கும், இது உங்களின் ஆளுமையை மேம்படுத்தும். தொழில்ரீதியாக டிசம்பர் மாதம் அவர்கள் புதிய உயரங்களை எட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள், இறுதியாக இப்போது கிடைக்கக்கூடும்.

திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான திருமண திட்டங்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறந்த பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டலாம், மேலும் வியாபாரத்தை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். இந்த மாதத்தில் எந்தவொரு பெரிய உடல்நலப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

மீனம்

டிசம்பர் மாதத்தில் சனிபகவான் உங்கள் ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உங்கள் மீதும் உங்கள் உடல் நலத்தின் மீதும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கக்கூடும். பழைய கடன்களையோ அல்லது முடிக்கப்படாத பணிகளையோ தீர்ப்பதற்கான நேரம் இது. இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கை மிகவும் நிலையானதாக மாறும், மேலும் நீங்கள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் ஒவ்வொன்றாக முடிக்கத் தொடங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து நல்ல வருமானம் ஈட்டலாம்.

இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம் மற்றும் வணிகம் அல்லது முதலீட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறந்த நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், குடும்பத்தில் நிலவி வந்த சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 21, 2026, 23:15 [IST]
Desktop Bottom Promotion