Latest Updates
-
நவம்பர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது -
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்...
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Arachuvitta Chicken Salna Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், சற்று ஹோட்டல் சுவையில் குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அரைச்சுவிட்ட சிக்கன் சால்னாவை செய்யுங்கள். இந்த சால்னா இட்லியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த அரைச்சுவிட்ட சிக்கன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிது
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* தேங்காய் - 1 துண்டு
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* முந்திரி - 5
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
சால்னா தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* கல்பாசி - சிறிது
* புதினா - 10 இலைகள்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
சோம்பு, மிளகு, கசகசா, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை
சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து ஜாரில் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய தேங்காய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை ஜாரில் உள்ள வறுத்த பொருட்களுடன் சேர்த்து,
அத்துடன் முந்திரி மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, புதினா
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து
வதக்கவேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன்
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அதை அடுப்பில் வைத்து 5
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா
தயார்.



Click it and Unblock the Notifications
