18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது!

Rahu Transit In Capricorn 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு பகவான். இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். இந்த ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை மற்றும் இவர் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

அந்த வகையில் ராகு தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிசம்பர் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் டிசம்பர் 05 ஆம் தேதி ராகு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசிக்கு ராகு சுமார் 18 ஆண்டுகள் கழித்து செல்கிறார். இந்த மகர ராசியின் அதிபதியும் சனி பகவான் ஆவார்.

Rahu Transit In Capricorn 2026 Will Be a Boon For These Zodiac Signs

ராகு சனி பகவானின் ராசியில் மீண்டும் அடுத்த 18 மாதங்கள் பயணிக்கவுள்ளார். ராகுவின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கப் போகிறது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மகர ராசிக்கு செல்லும் ராகுவால் எந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் வெற்றி பெறவும், நிறைய லாபத்தைப் பெறவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை சந்தித்து வந்த பணப்பிரச்சனைகள் தீரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி நேர்மறையான பலன்களைத் தரும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கலாம். திட்டங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்தவாறு நல்ல வெற்றியை அடையும். மனக்குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும். பண வரவு அதிகரிக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் இனி நல்ல வெற்றி கிடைக்கும்.

மீனம்

ராகு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். தாயாருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, உங்களின் செயல்திறனும் பாராட்டப்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, November 22, 2026, 23:32 [IST]
Desktop Bottom Promotion