Latest Updates
-
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்!
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவற்றில் சில நகரங்கள் உலகப் பணக்காரர்களை ஈர்க்கும் நகரங்களாக உள்ளன. அவர்களின் செல்வம் இந்த நகரங்களின் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. இந்த நகரங்கள் வலுவான நிதி அமைப்புகள், மூலதனம் மற்றும் இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன, இதனால் இந்த நகரங்கள் கோடீஸ்வரர்களுக்கு சிறந்த இடங்களாக அமைகின்றன. இந்த பதிவில் உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

நியூயார்க் நகரம், அமெரிக்கா
129 பில்லியனர்களுடன் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. வால் ஸ்ட்ரீட், உலகளாவிய ஹெட்ஜ் பண்ட்ஸ், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாக இருப்பதால், நியூயார்க் நகரம் உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாகத் திகழ்கிறது. நிதித்துறையைத் தவிர, இந்த நாட்டில் உள்ள பில்லியனர்கள் ரியல் எஸ்டேட், ஊடகம், ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலிருந்தும் வருகிறார்கள்.
லண்டன், ஐக்கிய இராச்சியம்
97 கோடீஸ்வரர்களுடன் லண்டன் நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. லண்டன் ஐரோப்பாவின் பொருளாதார மையமாகத் திகழ்கிறது. இந்த நகரிலுள்ள கோடீஸ்வரர்கள் நிதித்துறை, உலகளாவிய பண்டங்கள் வணிகம், ஆடம்பர பிராண்டுகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முதலீடுகள் எனப் பல்வேறு துறைகளில் பரவியுள்ளனர்.
ஷாங்காய், சீனா
சீனாவின் ஷாங்காய் நகரில், 92 கோடீஸ்வரர்கள் வசிப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நகரத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம், மின்-வணிகம், மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள். அதன் வேகமான தொழில் வளர்ச்சி மற்றும் வலுவான உள்நாட்டு நுகர்வோர் சந்தை ஆகியவை தொடர்ந்து செல்வத்தை பெருக்குவதற்குக் காரணமாக உள்ளன.
பெய்ஜிங், சீனா
91 கோடீஸ்வரர்களுடன் பெய்ஜிங் நகரம் நான்காம் இடத்தில் உள்ளது. சீனாவின் மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்ப நிறுவன நிறுவனர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள், இன்டர்நெட் நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழில் குழுமங்கள் பலவற்றிற்கு இந்த நகரம் இருப்பிடமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உலகின் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் நகரம் நீடிக்கிறது.
மும்பை, இந்தியா
90 பில்லினியர்கள் வசிக்கும் இந்தியாவின்பொருளாதார மையமான மும்பை, உலகின் பெரும் செல்வந்தர்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. செல்வாக்கு மிக்க வணிகக் குழுமங்கள், மருந்து நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகள் ஆகியவை மும்பையின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கைக்கு வலுசேர்க்கின்றன.
ஷென்சென், சீனா
'சீனாவின் சிலிக்கான் வேலி' என்று அழைக்கப்படும் சீனாவின் ஷென்சென் நகரம், தொழில்நுட்பம் மற்றும் வன்பொருள் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிறப்பிடமாகத் திகழ்கிறது. இந்த நகரத்தில் 85 கோடீஸ்வரர்கள் வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள கோடீஸ்வரர்களில் பலர், மின்னணுவியல், தொலைத்தொடர்பு, மின்சார வாகனங்கள் மற்றும் Semiconductor துறைகளில் நிறுவனங்களை உருவாக்கிய தொழில்முனைவோர்கள் ஆவர். சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த ஷென்சென், இன்று உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஹாங்காங்
சீனாவையும் உலகின் பிற பகுதிகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான சர்வதேச நிதி மையமாக திகழும் ஹாங்காங் 74 கோடீஸ்வரர்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள், மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாஸ்கோ, ரஷ்யா
இந்த பட்டியயலில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரே நகரம் இதுதான். ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் 69 மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். மாஸ்கோவில் உள்ள கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர் எரிசக்தி, உலோகங்கள், சுரங்கத் தொழில் மற்றும் கனரகத் தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகாலமாகவே, ரஷ்யாவின் நிதி மற்றும் பெருநிறுவனத் தலைமையகங்களின் மையமாக மாஸ்கோ திகழ்கிறது.
புது டெல்லி, இந்தியா
இந்தியாவின் தலைநகரான புது டெல்லி 63 கோடீஸ்வரர்களுடன் இந்த பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தப்படியாக கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் இந்திய நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் பல்வேறு துறைகளில் பரவியுள்ள குடும்ப வணிகங்களுடன் தொடர்புடையவர்கள்.
சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
'சிலிக்கான் வேலி' என்று அழைக்கப்படும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி 55 கோடீஸ்வரர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. இன்றும் இந்த நகரம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் நிறுவனர்களாகவோ அல்லது முதலீட்டாளர்களாகவோ உள்ளனர்.



Click it and Unblock the Notifications

