Latest Updates
-
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்!
Mercury Transit In Scorpio On 02 December 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களால் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். தற்போது புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த புதன் டிசம்பர் 02 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். புதன் இந்த விருச்சிக ராசியில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை இருந்து, பின் தனுசு ராசிக்குள் நுழைவார். புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தையும் காண்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறவும் செய்வார்கள். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் திறமை பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மொத்தத்தில் புதனின் ஆசியால் பொருள் வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் மேம்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



