Latest Updates
-
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க..
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா?
இந்து மதத்தில் மரணத்தின் கடவுளாக அறியப்படும் எமதர்மனுக்கு ஒரு உதவியாளர் இருக்கிறார். அவரைப் பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம். சித்திரகுப்தர் 'எமதர்மனின் கணக்காளர்' என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், அவர் 'அக்ரசந்தானி' எனும் பதிவேட்டைப் பராமரிக்கிறார். இதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு பாவ, புண்ணியங்கள், சொல் மற்றும் செயல் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரு ஆன்மா இறக்கும்போது, சித்திரகுப்தர் அந்த உயிரின் பாவ, புண்ணிய கணக்கை மரணம் மற்றும் நீதியின் கடவுளான எம தர்மனிடம் சமர்ப்பிக்கிறார். அந்த நபர் மறுபிறவி, சொர்க்கம் அல்லது நரகத் தண்டனைக்குத் தகுதியானவரா என்பதை எமனே தீர்மானிக்கிறார். இந்த பதிவில் பலரும் அறியாத சித்திரகுப்தரின் முன்கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சித்திரகுப்தரின் பிறப்பு
சித்திரகுப்தர், படைப்பின் கடவுளான பிரம்மதேவரின் பதினேழாவது 'மானசபுத்திரன்' என்று கருதப்படுகிறார். இந்து மதத்தின் நூலான 'அகில்ய காமதேனு'வின் ஒன்பதாவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 'எம சம்ஹிதை'யில், ஒவ்வொரு தனிமனிதனின் செயல்களையும் பதிவு செய்து வைப்பதில் தனக்கு சிரமம் ஏற்படுவதாக யமதர்மன் பிரம்மதேவனிடம் முறையிடுகிறார். இதற்குத் தீர்வாக, பிரம்மதேவர் 11,000 ஆண்டுகள் தவம் புரிந்தார். அவர் கண்களைத் திறந்தபோது, அவரது உடலிலிருந்து பேனாவும் மைக்கூடும் ஏந்திய ஒரு உருவம் தோன்றியது. பிரம்மனின் சித்தத்திலிருந்து தோன்றியதால், அவர் 'சித்திரகுப்தன்' என்று பெயரிடப்பட்டார். மேலும், கர்ம வினைகளின் பதிவுகளை நிர்வகிக்கும் முதன்மை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
பிரம்மதேவரின் உடல் பகுதியிலிருந்து தோன்றியவர் என்பதால், அவர் 'காயஸ்தர்' என்றும் அழைக்கப்படுகிறார். கருட புராணத்தின்படி, எமலோகத்தில் உள்ள சித்திரகுப்தனின் அரண்மனை 'காஞ்சனபவனம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கு அவர், தமக்கு உதவியாக இருக்கும் 13 துணைத் தேவதைகளுடன் அமர்ந்து, உயிர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பதிவு செய்யும் பணியைச் செய்கிறார்.
சித்திரகுப்தன் ஏன் 'எமனின் கணக்காளர்' என்று அழைக்கப்படுகிறார்?
சித்திரகுப்தன் வெறும் நிர்வாகி மட்டுமல்ல, அவர் பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த தணிக்கையாளரும் ஆவார். அவர் 'அக்ரசந்தானி' எனப்படும் ஒரு பதிவேட்டைப் பராமரிக்கிறார். இந்த ஏட்டில், ஒரு நபர் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களும், பாவச் செயல்களும் மற்றும் அந்தச் செயல்களுக்குப் பின்னால் இருந்த நோக்கங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகின்றன.
மனிதர்கள் பராமரிக்கும் கணக்குகளில் தவறுகள் ஏற்படலாம் அல்லது மாற்றியமைக்க முடியும், ஆனால், சித்திரகுப்தனின் பதிவேட்டில் ஒவ்வொரு சிறு விஷயமும் மிகத் துல்லியமாகப் பதியப்படுகிறது. கருட புராணத்தின்படி, ஒருவரது மனதில் தோன்றும் ஒரு தீய எண்ணம் கூட அவரது பதிவிலிருந்து தப்ப முடியாது. எமதர்மனுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தனது பதிவேட்டின் மூலம் வழங்குவதால், சித்திரகுப்தன் 'எமனின் கணக்காளர்' என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு ஆன்மா எமலோகத்திற்கு சென்ற பின் என்ன நடக்கும்?
கருட புராணத்திலுள்ள 'பிரேத காண்ட'த்தின்படி, ஒரு ஆன்மா மனித உடலை விட்டு நீங்கும்போது, 'எமதூதர்கள்' என்று அழைக்கப்படும் மரணத் தூதர்கள் இறந்த அந்த ஆன்மாவை எமலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அந்த ஆன்மாவின் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. முதலில், அந்த ஆன்மா எமதர்மனின் அவையில் நிறுத்தப்படுகிறது. பிறகு, சித்திரகுப்தன் 'அக்ரசந்தானி' புத்தகத்தைத் திறந்து, அந்த ஆன்மா செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகள் அனைத்தையும் வாசித்துக் காட்டுகிறார். அதன் பின்னர், அந்தப் பதிவுகளை உறுதிப்படுத்த பஞ்சபூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன், மனம் ஆகியன சாட்சிகளாக அழைக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, சித்திரகுப்தன் சமர்ப்பித்த கணக்கை எமதர்மன் ஆய்வு செய்கிறார். ஒருவரின் நல்வினைகள் தீவினைகளை விட அதிகமாக இருந்தால், அந்த ஆன்மா சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமா அல்லது மேலான பிறவியைப் பெற வேண்டுமா என்பதை எமதர்மனே தீர்மானிக்கிறார். மாறாக, பாவங்கள் அதிகமாக இருந்தால், மறுபிறவி எடுப்பதற்கு முன்னதாக அந்த ஆன்மா செய்த பாவங்களைக் கழுவுவதற்காக, நரகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதனால்தான் சித்திரகுப்தன் எமனின் கணக்காளர் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், அவர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்கிறார்.



Click it and Unblock the Notifications

