Latest Updates
-
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்!
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Chef Venkatesh Bhat Style Soya Milagu Kurma Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் உங்கள் வீட்டில் இரவு சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால், அதற்கு மீல் மேக்கர் கொண்டு பிரபல செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் மிளகு குருமா செய்யுங்கள். இந்த குருமா நன்கு காரசாரமாக இருப்பதோடு, புரோட்டீன் அதிகம் நிறைந்தது. இந்த சுவையில் மீல் மேக்கரை குருமா செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* பட்டை - 4 துண்டு
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 1/2டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* முந்திரி - 15-20 (வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்தது)
ஊற வைப்பதற்கு...
* சோயா/மீல் மேக்கர் - 500 கிராம்
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
* ஏலக்காய் தூள் - சிறிது
* எலுமிச்சை - 1
* தயிர் - 400 மிலி
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* ஊற வைத்த சோயா
* சுவைக்கேற்ப உப்பு
* பிரஷ் க்ரீம் - 200 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும். பின் சோயாவையும் சுடுநீரில் போட்டு 2 நிமிடம் ஊற வைத்து,
பின்பு நீரை வடிகட்டிவிட்டு, சோயாவில் உள்ள அதிகப்படியான நீரையும்
பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, மல்லி,
சோம்பு, மிளகு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சோயாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது
உப்பு, மிளகுத் தூள், ஏலக்காய் தூள், 1 எலுமிச்சையின் சாறு மற்றும்
400 மிலி தயிரை சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், அரைத்த விழுதை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த சோயாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும், அதில் பிரஷ்
க்ரீம் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி, நெய் ஊற்றி
கிளறினால், சுவையான சோயா மிளகு குருமா தயார்.



Click it and Unblock the Notifications
