Latest Updates
-
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா? -
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது!
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி?
Lying Zodiac Signs in Tamil: பொய் சொல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்வார்கள். சிலர் தங்களுடைய லாபத்திற்காகவும், சிலர் மற்றவர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காகவும் பொய் சொல்வார்கள். அந்த வகையில், ஜோதிடத்தின் படி 12 ராசிக்காரர்களும் எந்தெந்த காரணங்களுக்காகப் பொய் சொல்ல வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகப் பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய் சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்காது. இருப்பினும், தங்களுடைய கௌரவம், நற்பெயர் மற்றும் குடும்பத்தின் நலனைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் சிறிய பொய்களைச் சொல்லலாம். குறிப்பாக, பொருளாதார ஆதாயம் கிடைக்கும் என்றால் சில நேரங்களில் உண்மையை மறைக்கவும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட விளையாட்டுத்தனமாகப் பொய் சொல்லக்கூடியவர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சில விஷயங்களை மறைக்கலாம். மற்றவர்கள் தங்களைத் தாழ்வாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய குறைகளை மறைத்துப் பேசுவார்கள். பணம், புகழ், அழகு போன்றவற்றின் மீது இருக்கும் ஆர்வமும் சில நேரங்களில் பொய் சொல்லத் தூண்டலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சாதுரியமாகப் பேசுவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் அல்லது நினைத்த காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்றால் அதில் கொஞ்சம் பொய்யையும் கலந்துவிடுவார்கள். குடும்பம், நண்பர்கள், பணியிடம் எனப் பல இடங்களில் இந்தப் பழக்கம் வெளிப்படலாம். இவர்களுடைய பொய்கள் கூட சில நேரங்களில் உண்மை போலவே தோன்றும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்காகச் சில நேரங்களில் பொய் சொல்லலாம். குடும்பத்தினரிடம் தங்களுக்குத் தேவையான ஆதரவு கிடைக்க வேண்டும் அல்லது ஒரு காரியம் சாதகமாக முடிய வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு பேசுவார்கள். அதேப் போல், தாங்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்கவும் சிறிய பொய்களைச் சொல்ல வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இருப்பினும், தாங்கள் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கலாம். தங்களுடைய கௌரவம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தவறுகளை மறைக்க முயற்சி செய்வார்கள். தங்களுடைய இயலாமை மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவும் சில நேரங்களில் பொய் சொல்லலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் பொய்கள் பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்ததாக இருக்கலாம். ஒரு விஷயத்தை அப்படியே சொல்லாமல், தங்களுக்குச் சாதகமாகச் சில தகவல்களை மாற்றிப் பேசுவார்கள். சில நேரங்களில் தாங்கள் சொல்வது பொய் என்பதையே உணராமல் உண்மை போலவே நம்பிக்கையுடன் பேசவும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களிலும் பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் என்று கூற முடியாது. ஆனால், ஒரு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும் அல்லது தங்களுக்குச் சாதகமான பலன் கிடைக்க வேண்டும் என்றால் பொய் சொல்லத் தயங்க மாட்டார்கள். குறிப்பாக, உறவுகளில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள சில உண்மைகளை மறைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய பலவீனமான தருணங்களில் பொய் சொல்லலாம். உண்மையைச் சொன்னால் மனதளவில் காயப்படுவோம் அல்லது பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று நினைக்கும் சூழ்நிலையில் உண்மையை மறைக்க வாய்ப்புள்ளது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதிப்புகளில் இருந்து வெளியேறவும் பொய்யை ஒரு வழியாகப் பயன்படுத்தலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சில நேரங்களில் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதற்காக விஷயங்களை மிகைப்படுத்திக் கூறலாம். தங்களுடைய தவறுகளை மறைக்கவும், ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவும் பொய் சொல்லலாம். சில சமயங்களில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் இந்தப் பழக்கம் வெளிப்படலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தாங்கள் சொல்லும் பொய்யால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நினைத்தால் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். குறிப்பிட்ட சூழ்நிலையில் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றால் உண்மையை மறைக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், பொய் சொல்லியே வாழ்க்கையை நடத்துபவர்கள் என்று இவர்களைக் கூற முடியாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்களுடைய காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகச் சில நேரங்களில் பொய் சொல்லலாம். தங்களுக்குத் தேவையான ஆதாயம் கிடைக்க வேண்டும் அல்லது ஒரு விஷயம் தடையின்றி முடிய வேண்டும் என்றால் உண்மையை மறைக்கத் தயங்க மாட்டார்கள். சில நேரங்களில் முழு உண்மையையும் வெளிப்படுத்தாமல், தகவல்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் குணமும் இருக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்களுடைய மகிழ்ச்சி, தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சில சிறிய பொய்களைச் சொல்லலாம். ஒரு விஷயம் நல்லபடியாக முடிவடைய வேண்டும் அல்லது மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் உண்மையை மறைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
