Latest Updates
-
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்? -
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி? -
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா? -
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் உணவு எது? இது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
Winter Skin Care Tips In Tamil: குளிர்காலம் என்பதால் சருமத்தில் வறட்சி, அரிப்பு, பொலிவின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக, குளிர்ந்த மற்றும் வறட்சியான காற்று சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தைக் குறைத்து, சருமத்தை வறட்சியாகவும் கரடுமுரடாகவும் மாற்றிவிடும். இதனால் முகத்தில் ஈரப்பதம் குறைந்து, முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படலாம். எனவே, குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க கூடுதல் பராமரிப்பு அவசியம்.

அதற்கு விலையுயர்ந்த அழகு பராமரிப்பு பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்ப் பயன்படுத்தி வந்தாலே சருமத்தை ஈரப்பதத்துடனும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். அப்படி குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தை பொலிவாக காட்ட உதவும் ஒரு பொருள் தான் ரோஜாப்பூ இதழ்கள். அதுவும் உலர்ந்த ரோஜா இதழ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவக்கூடும்.
முக்கியமாக இந்த உலர்ந்த ரோஜாப்பூ இதழ்களுடன் ஒருசில இயற்கை பொருட்களை சேர்த்து ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். இப்போது குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுத்து, முகத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும் 5 உலர்ந்த ரோஜாப்பூ இதழ் ஃபேஸ் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. உலர்ந்த ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1 கையளவு உலர்ந்த ரோஜாப்பூ இதழ்களை எடுத்துக் கொண்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அவற்றை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. காய்ந்த ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1 கையளவு காய்ந்த ரோஜாப்பூ இதழ்களை எடுத்துக் கொண்டு, கைகளால் நசுக்கி விட வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
3. காய்ந்த ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் தயிர்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1 கையளவு காய்ந்த ரோஜாப்பூ இதழ்களை எடுத்துக் கொண்டு கைகளால் நசுக்கி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
4. காய்ந்த ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் கற்றாழை ஜெல்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு காய்ந்த ரோஜாப்பூ இதழ்களையும், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் பிளெண்டரில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
5. காய்ந்த ரோஜாப்பூ இதழ்கள் மற்றும் கடலை மாவு
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் காய்ந்த ரோஜாப்பூ இதழ்களை பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
