Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
Weight Loss Tips In Tamil: இன்றைய காலகட்டத்தில் உலகளவில் பெரும்பாலானோர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் தொப்பை. இந்த தொப்பை ஒருவரது அழகை கெடுப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் வரத் தூண்டுகின்றன.
இந்த தொப்பையைக் குறைப்பதற்கு என்று இணையத்தில் ஏராளமான வழிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அனைத்துமே அனைவருக்குமே நல்ல பலனைத் தந்துவிடும் என்று கூறிவிட முடியாது. அவற்றில் சில மட்டுமே, அதுவும் சிலருக்கு மட்டுமே நல்ல பலனைத் தரலாம்.

ஆனால் பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றவும், தேவையில்லாத கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றவும் ஒரு அற்புதமான பானம் பரிந்துரைக்கப்பட்டது. அது தான் ஓமம் மற்றும் சீரகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ.
இந்த டீக்கு பயன்படுத்தப்படும் ஓமம் மற்றும் சீரகத்தில் ஏராளமான சக்தி வாய்ந்த மருத்துவ பண்புகள் உள்ளன. இவை ஒருவரது உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகின்றன.
ஓமம் மற்றும் சீரக விதைகளுக்கு இடையேயான வித்தியாசம்
ஒம விதைகளானது மிகவும் சிறிய அளவில் நீள்வட்ட வடிவத்தில், ஒரு தனித்துவமான மணம் மற்றும் லேசான கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். இந்த விதைகளில் தைமோல் என்னும் கலவை அதிகளவில் உள்ளன. இவை செரிமானத்தை சீராக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
அதே சமயம் சீரக விதைகளானது சற்று நீளமாகவும், மண வாசனையுடனும் இருக்கும். இந்த விதைகளில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
ஓமம் மற்றும் சீரக விதைகள் எப்படி எடையைக் குறைக்க உதவுகின்றன?
ஓமம் மற்றும் சீரக விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ, செரிமானத்தை தூண்டிவிடுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்த உதவுவதால், இது உடல் எடையைக் குறைப்பதில் சிறந்ததாக திகழ்கிறது.
எப்படியெனில் ஓமம் மற்றும் சீரக விதைகளிலும் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன. இவை செரிமான மண்டலத்தில் இருந்து வாயுவை வெளியேற்ற உதவி புரிந்து, வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கின்றன. இதன் விளைவாக இது செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரித்து, எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
இது தவிர ஓமம் மற்றும் சீரக விதைகளில் உள்ள தைமால் மற்றும் சீரக ஆல்டிஹைட் போன்ற கலவைகள் மெட்டபாலிச விகிதத்தை அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. முக்கியமாக இவ்விரு விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயைக் குடிக்கும் போது, அது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, பசியை அடக்கவும் செய்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது.
ஓமம் மற்றும் சீரக டீயைத் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* ஓமம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் ஓமம் மற்றும் சீரக விதைகளை சேர்த்து 5-7 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் அல்லது சூடான நிலையில் குடிக்க வேண்டும்.
எப்போது குடிக்க வேண்டும்?
ஓமம் மற்றும் சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் டீயின் முழு பலனைப் பெற நினைத்தால், அதைக் குடிக்க சிறந்த நேரம் காலை வேளை தான். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதோடு ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இப்படி தவறாமல் மேற்கொண்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications