Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Mercury Direct In Pisces On April 2024: நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணி என்பதால், இந்த வக்ர நிவர்த்தியானது வாழ்வின் இந்த அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் ஏராளமான நற்பலனைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் துறையில் நல்ல முதுன்னேற்றத்தைக் காண்பார்கள். செலவுகள் குறையும், பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாடு அல்லது வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு எற்படும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலைகளை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக அனைவராலும் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications