Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Benefits Of Garlic Peels In Tamil: பூண்டு உணவிற்கு நல்ல சுவையைத் தரும் காய்கறி மட்டுமின்றி, ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட மருத்துவ பொருளும் கூட. பொதுவாக உணவில் பூண்டு சேர்க்கும் போது, அதன் தோலை நீக்கி விட்டு தான் சேர்ப்போம். ஆனால் எந்த அளவு பூண்டு பல்லில் சத்து உள்ளதோ, அதே அளவில் அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா?
ஆம், பூண்டின் தோலில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுவும் இதன் தோலில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவையுடன், ப்ளேவோனாய்டுகள் மற்றும் க்யூயர்சிடின் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன.

எனவே இனிமேல் பூண்டின் தோலை தூக்கி எறியாமல், அவற்றை முடிந்த அளவில் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம், பல நன்மைகளைப் பெறலாம். இப்போது பூண்டின் தோல் என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதைக் காண்போம்.
1. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
பூண்டின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். எனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சமையலில் பூண்டு சேர்க்கும் போது, தோலுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது. இதனால் இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
2. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
பூண்டினுள் மட்டுமின்றி, அவற்றின் தோலிலும் சல்பர் என்னும் கலவை உள்ளது. இந்த சல்பர் இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சமையலில் தோலுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
3. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூண்டின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. முக்கியமாக இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
4. தலைமுடிக்கு நல்லது
பூண்டின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், இது கிருமிகளை திறம்பட அழிக்கும். அதுவும் தலையில் பொடுகு அதிகம் இருந்தால், பூண்டின் தோலைப் பயன்படுத்தும் போது, பொடுகிற்கு காரணமான பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, தலைமுடி சேதமடைவது தடுக்கப்படும். அதற்கு பூண்டின் தோலை அரைத்து பொடி செய்து, தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். முக்கியமாக பூண்டின் தோலில் உள்ள வைட்டமின் சி தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. சரும ஆரோக்கியம் மேம்படும்
பூண்டின் தோலில் கொலாஜன் புரோட்டீன்கள் உள்ளன. இவை சருமத்திற்கு மிகவும் நல்லது. கொலாஜன் சருமத்தின் நெகிழ்வுத்ன்மையை அதிகரித்து, சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் அழற்சியால் ஏற்படும் சரும அரிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்க பூண்டின் தோல் உதவுகிறது. அதுவும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பூண்டின் தோலை அரைத்து பொடி செய்து, தயிர் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Image Courtesy: Freepik
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications