Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Saiva Chicken Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு இதுவரை நீங்கள் செய்திராத ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சைவ சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த கிரேவி சிக்கன் கிரேவியைப் போன்றே, ஏன் சிக்கன் கிரேவியை விட மிகவும் ருசியாக இருக்கும். சிக்கன் வாங்க முடியாத சமயத்தில் இப்படியொரு கிரேவி செய்தால், சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிது
* கிராம்பு - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 2 பெரிய துண்டு (அரைத்தது)
சைவ சிக்கனை செய்வதற்கு...
* கடலை மாவு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கல்பாசி, சோம்பு ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்
வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதகக
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன்
மசாலா, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி,
சிறிது நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்குள் சைவ சிக்கனை தயார் செய்யலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில்
கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா மற்றும் 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து, சிறிது நீரை தெளித்து,
கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறு சிறு துண்டுகளாக கைகளால் கிள்ளி வைக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கிள்ளி வைத்துள்ள துண்டுகளை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள
வேண்டும். இப்போது சைவ சிக்கன் துண்டுகள் தயார்.
* அதன் பின் தேங்காயை சிறிது எடுத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் இருந்து பச்சை
வாசனை போயிருக்கும். இப்போது பொரித்து வைத்துள்ள சைவ சிக்கன்
துண்டுகளை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான சைவ சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications