Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Dehydration Symptoms In Tamil: நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், அதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. சொல்லப்போனால் நமது உடல் எடையில் சுமார் 60% தண்ணீர் உள்ளது. எனவே உடல் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டுமானால், உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஆனால் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. இப்படி வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்குகிறது.

நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கினால், அதை உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வரத் தூண்டும். சொல்லப்போனால் இது ஒருவருக்கு மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.
சரி, நமது உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இல்லாவிட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தெரியும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளானது தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும்.
1. தாகம்
உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே தாகம் அதிகம் எடுத்தால், நீரை அதிகம் குடியுங்கள். அதுவும் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் நீரைக் குடியுங்கள்.
2. அடர் நிற சிறுநீர்
உங்களது சிறுநீர் அடர் நிறத்தில் உள்ளதா? அப்படியானால் உடலில் நீர் போதுமான அளவில் இல்லை என்று அர்த்தம். அதுவும் சிறுநீரானது அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் உடனே அதிகளவு நீரைக் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
3. உடல் களைப்பு
ஒருவர் காரணமின்றி திடீரென்று மிகுந்த உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனத்தை அனுபவித்தால், உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இப்படியான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதிக நீரை குடிக்க ஆரம்பியுங்கள்.
4. தலைவலி
உங்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது என்றால், உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே கோடையில் அடிக்கடி தலைவலியை சந்தித்தால், அதிலிருந்து விடுபட நீரை வழக்கத்தை விட அதிகமாக குடியுங்கள்.
5. தலைச்சுற்றல்
தலைச்சுற்றல் பல பிரச்சனைகளின் அறிகுறி. குறிப்பாக நீரிழப்பானது தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தை உண்டாக்கும். எனவே கோடையில் நீங்கள் அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சனையை சந்திக்கிறீர்களானால், நீங்கள் அதிக அளவு நீரைக் குடிக்கத் தொடங்க வேண்டும் என்று அர்த்தம்.
6. வாய் வறட்சி
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது வாய் வறட்சியை அதிகரிக்கும். ஆகவே நீங்கள் இந்த வாய் வறட்சி பிரச்சனையை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் வழக்கமாக குடிக்கும் நீரை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை குடிக்க வேண்டும்.
7. சரும வறட்சி
உங்கள் சருமம் அதிகம் வறண்டு போகிறதா? சருமத்தில் செதில் செதிலாக தோல் வரத் தொடங்குகிறதா? அப்படியானால் உங்கள் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லை என்று அர்த்தம். இந்நிலையில் நீரை அதிகம் அருந்த வேண்டும்.
8. மலச்சிக்கல்
நீரிழப்பு பிரச்சனையானது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை அதிகம் உண்டாக்கும். ஆகவே நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டால், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிக நீரை குடிப்பதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
