மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்!

Malavya Rajyog 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இதுவரை சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார்.

சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்ததால், பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது ஒருவருக்கு செல்வ செழிப்பைத் தருவதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் தரும். முக்கியமாக இந்த ராஜயோகம் 2027 ஜனவரி 01 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இதனால் டிசம்பர் மாதம் முழுவதும் இந்த ராஜயோகமானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது.

Malavya Rajyog 2026 These Zodiac Signs Will Get More Financial Benefits

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையவுள்ளனர். இதனால் வருகிற புத்தாண்டின் போது அந்த ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள பணப்பிரச்சனைகள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழவுள்ளனர். இப்போது மாளவ்ய ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனையவுள்ளனர் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். அதாவது புதிய தொழிலை தொடங்குவதற்கான சிறப்பான காலமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு செழிப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தேவையற்ற செலவுகள் குறையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலை உயரும். மன அழுத்தம் குறையும். வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செல்வமும், சொத்தும் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் வேலை தடையின்றி சிறப்பாக நடக்கும். உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் இக்காலம் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம், இக்காலத்தில் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 23, 2026, 23:50 [IST]
Desktop Bottom Promotion