டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?

December Matha Rasi Palan 2026: நவம்பர் மாதத்தின் இறுதியில் உள்ளோம். சொல்லப்போனால் 2026 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிட ரீதியாக டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் விளைவாக மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.

அதுவும் டிசம்பர் மாதத்தில் ராகு, கேது, சனி, குரு பகவான், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக புதன் இந்த மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார், சனி பகவான் வக் நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணத்தை தொடங்கவுள்ளார், குரு பகவான் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார் மற்றும் சூரியன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

December Matha Rasi Palan 2026 These 4 Zodiac Signs Dream Will Come True

இப்படியான கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்ற பாதைகள் திறக்கும், நீண்ட நாள் கனவுகள் நனவாகும், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இப்போது டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முடிக்க முடியாத வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மங்களகரமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தங்களின் தொழிலை விரிவுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதமானது சாதகமாக இருக்கும். அதுவும் புதிய வருமான வழிகள் உருவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குரு பகவானின் நிலையால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது மிகவும் மங்களகரமானதாக அமையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 23, 2026, 22:40 [IST]
Desktop Bottom Promotion