For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க ரொம்ப காலம் ஆரோக்கியமா வாழணுமா? அப்ப 'இத' உங்க உணவில் சேர்த்துக்கோங்க...!

கீரை மற்றும் காலே உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளும், பழங்கள் மற்றும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி மற்றும் கேரட் போன்றவை நன்மைகள் அளிக்கின்றன.

|

பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவு தான் நம்மமுடைய ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கிறது. உணவுகளை பொறுத்து உடலில் ஏற்படும் மாற்றங்களால் நாள்பட்ட நோய்கல் உருவாகும் அல்லது உருவாகாமல் இருக்கும். சில சமயங்களில் நாம் உட்க்கொள்ளும் உணவு நமது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும். ஆதலால், ஊட்டசத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

You can live longer by just adding this to your diet

ஆனால், நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கிறீர்களா? ஆம் எனில், இது உங்களுக்கு பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆம், சமீபத்திய ஆராய்ச்சியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஐந்து தினசரி பரிமாறல்களை சாப்பிடுவது, அவற்றில் இரண்டு பழங்கள் மற்றும் மூன்று காய்கறிகள், நீண்ட ஆயுளைத் தக்கவைக்க தேவையான உகந்த அளவு என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து விளக்கமாக இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

சமீபத்திய ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் ஐந்து தினசரி பரிமாறல்களை சாப்பிடுவதை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், அவற்றில் இரண்டு பழங்கள் மற்றும் மூன்று காய்கறிகள், நீண்ட ஆயுளைத் தக்கவைக்க தேவையான உகந்த அளவு ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. உலகளவில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பெரியவர்களைக் குறிக்கும் ஆய்வு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் முதன்மை இதழான சர்குலேஷனில் வெளியிடப்பட்டது.

MOST READ: உங்க பெற்றோருக்கு மாரடைப்பு வரப்போகுது என்பதைக் குறிக்கும் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வு என்ன சொல்கிறது?

பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகள் இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட இறப்புக்கு காரணமான பல நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கான ஆபத்தை குறைக்க உதவுகின்றன. ஆயினும், யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, 10 பெரியவர்களில் ஒருவர் மட்டுமே போதுமான பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுகிறார் என்கிறது.

தினசரி உட்கொள்ளல்

தினசரி உட்கொள்ளல்

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் போன்ற குழுக்கள் தினமும் நான்கு முதல் ஐந்து பரிமாணங்களாக ஒவ்வொரு பழங்களையும் காய்கறிகளையும் பரிந்துரைக்கிறது. அதற்கேற்ப நுகர்வோர் பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான அளவு தினசரி உட்கொள்ளலாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த உணவுகளை உள்ளடக்குவது மற்றும் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைப்பு மற்றும் வேளாண்மைத் துறை ஆகியவை அமெரிக்கர்களுக்கான 2020-2025 உணவு வழிகாட்டுதலின் வடிவத்தில் தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டன. இந்த வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு உணவிற்கும் தட்டில் பாதி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

MOST READ: இந்த விஷயங்களை மட்டும் நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்...!

80% மக்கள்

80% மக்கள்

எவ்வாறாயினும், அமெரிக்காவில் 80% க்கும் அதிகமான மக்கள் இந்த பரிந்துரையை பூர்த்தி செய்யவில்லை என்பதையும், ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளின் நுகர்வு அதிகரிப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதையும் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. அனைத்து ஆய்வுகளின் பகுப்பாய்வு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் கலவையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுளோடு தொடர்புடையது

நீண்ட ஆயுளோடு தொடர்புடையது

தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. ஐந்து பரிமாணங்களுக்கு மேல் சாப்பிடுவது கூடுதல் நன்மைகளுடன் தொடர்புடையதாக இல்லை. தினமும் சுமார் 2 பரிமாண பழங்களையும், தினசரி மூன்று பரிமாண காய்கறிகளையும் சாப்பிடுவது மிக நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது.

குறைவான ஆபத்து

குறைவான ஆபத்து

ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு ஐந்து பரிமாணங்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டால், அனைத்து காரணங்களிலிருந்தும் இறப்புக்கு 13 சதவீதம் குறைவான ஆபத்து உள்ளது. இருதய நோயால் இறக்கும் ஆபத்து 12 சதவீதம் குறைவு, இதய நோய் மற்றும் பக்கவாதம், புற்றுநோயால் இறப்பதற்கான 10 சதவீதம் குறைவான ஆபத்து, மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற சுவாச நோய்களால் இறப்புக்கு 35 சதவீதம் குறைவான ஆபத்து ஆகியவை இதில் அடங்கும்.

MOST READ: எகிப்தியர்களால் அருந்தப்பட்ட இந்த மலர் பானம்... உங்களுக்கு என்ன ஆரோக்கிய நன்மைகளை தருது தெரியுமா?

ஊட்டசத்து நிறைந்த உணவுகள்

ஊட்டசத்து நிறைந்த உணவுகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளாக ஒருவர் கருதும் அனைத்து உணவுகளும் ஒரே மாதிரியான நன்மைகளை அளிக்காது. மறுபுறம், கீரை மற்றும் காலே உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளும், பழங்கள் மற்றும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி மற்றும் கேரட் போன்றவை நன்மைகள் அளிக்கின்றன.

ஒரே அளவிலான நன்மைகள் இல்லை

ஒரே அளவிலான நன்மைகள் இல்லை

தற்போதைய உணவுப் பரிந்துரைகள் பொதுவாக மாவுச்சத்து காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து வகையான பழங்களையும் காய்கறிகளையும் ஒரே மாதிரியாகக் கருதினாலும், எல்லா பழங்களும் காய்கறிகளும் ஒரே அளவிலான நன்மைகளை வழங்குவதில்லை என்று கண்டறியப்பட்டது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் என்னவென்றால், இது ஒவ்வொரு உணவிலும் பழம் மற்றும் காய்கறிகளுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் நன்மைகளுக்கு இந்த ஆராய்ச்சி வலுவான சான்றுகளை வழங்குகிறது மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக தினமும் உட்கொள்ள ஒரு இலக்கை பரிந்துரைக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையாகவே தொகுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள், அவை பெரும்பாலான உணவு மற்றும் சிற்றுண்டிகளில் சேர்க்கப்படலாம், மேலும் அவை நம் இதயங்களையும் உடல்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

You can live longer by just adding this to your diet

Here we are talking about the You can live longer by just adding this to your diet.
Story first published: Wednesday, April 7, 2021, 12:43 [IST]
Desktop Bottom Promotion