Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Dhana Yog 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் சுக்கிரன் மார்ச் 01 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவான் உள்ளார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான், சுக்கிரனுடன் சேர்ந்து தன யோகத்தை உருவாக்கியுள்ளார்.

மீன ராசி சுக்கிரனின் உச்ச ராசி என்பதால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது 30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் சனி சுக்கிரனால் உருவாகும் தன யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியையும், எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவு வலுவடையும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டலாம். உடன்பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலனாக, முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
