Latest Updates
-
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும்
சுக்கிரனின் அருளால் மார்ச் மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க ஆடம்பரமான வாழ்க்கையை வாழப்போறாங்க..
Venus Transit In March 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார், காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மற்றும் கவர்ச்சிகரமான அழகுடன் இருப்பார்.
அந்த வகையில் மார்ச் மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக மார்ச் 02 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். பின் மார்ச் 04 ஆம் தேதி சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார். அதைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில், அதுவும் மார்ச் 26 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைவார்.

இப்படி சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் 4 ராசிக்காரர்கள் சுக்கிரனின் அருளால் மார்ச் மாதத்தில் செழிப்பான வாழ்க்கையை வாழப்போகிறார்கள். இப்போது மார்ச் மாதத்தில் சுக்கிரனின் அருளால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மார்ச் மாத சுக்கிரனின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை புத்துணர்ச்சி நிறைந்து இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. படைப்புத் துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன ரீதியாக நிம்மதியாகவும், தன்னம்பிக்கை நிறைந்தும் இருப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மிதுனம்
மார்ச் மாத சுக்கிரனின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் மற்றும் நல்ல பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். ஊடகம், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
மார்ச் மாத சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இது உங்களின் நம்பிக்கையையும், தைரியத்தையும் அதிகரிக்கும்.
கும்பம்
மார்ச் மாத சுக்கிர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும் மற்றும் புரிதல் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். இதனால் உங்களின் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

