Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அடுத்த 146 நாட்கள் இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கப்போகுது..
Saturn Transit 2026: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒழுக்கம், நேர்மை, நியாயம், கர்மம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியிலும், உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

ஆனால் மே 17 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அக்டோபர் 09 ஆம் தேதி வரை, சுமார் 146 நாட்கள் வரை இருக்கப் போகிறார். இந்த ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் உள்ளது. மேலும் இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த புதனின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள்.
முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒன்றிற்கு இருமுறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இப்போது ரேவதி நட்சத்திரம் செல்லும் சனி பகவானால் அடுத்த 146 நாட்கள் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். மேலும் பல இடையூறுகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடைலாம்.
செலவுகளை கட்டுப்படுத்தி, பணத்தை சேமிப்பது என்பது கடினமாக இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்படும். இந்த காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக தொடங்குவதற்கு முன் நன்கு யோசித்து கவனமாக மேற்கொள்ள வேண்டும். முடிந்தால், புதிதாக எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.
மீனம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக சிரமப்படக்கூடும். காதல் வாழ்க்கையில் பல தவறான புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு முதலீடுகளை செய்தால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். வேலையில் போட்டி அதிகமாக இருக்கும்.
உங்களின் தன்னம்பிக்கை குறையக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பொறுமையாகவும், நேர்மறையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால், மோசமான விளைவுகளை தவிர்க்கலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் மற்றும் உங்களின் திட்டங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கும்பம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஆதரவு குறைவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்றும் எண்ணம் எழலாம். ஆனால் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனுபவசாலிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நடந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












