Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அடுத்த 146 நாட்கள் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
Saturn Transit 2026 In Revathi Nakshatra: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் நேர்மை, ஒழுக்கம், நீதி, கடமை, வேலை, தொழில் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.
இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சனியின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார். இந்நிலையில் சனி பகவான் மே 17 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 09 ஆம் தேதி வரை இருப்பார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த புதனின் நட்சத்திரத்தில் சனி பகவான் சுமார் 146 நாட்கள் வரை இருக்கப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையும் உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருப்பார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் பல முக்கியமான வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
தனுசு
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் குறைந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு, சனி பகவானின் அருளால் இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பி முயற்சித்து வந்தால், இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முக்கியமாக பணப்பிரச்சனைகள் குறையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
