Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் தனித்துவமானவர்களாகவும், வித்தியாசமான ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிலர் சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்களாக இருக்கும் அதே நேரத்தில் சிலர் அவர்களை சுற்றி தேவையற்ற வாக்குவாதங்களையும், கலகத்தையும் உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.
சிலரின் இந்த கலக குணத்திற்கு அவர்கள் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. அவர்களின் தெரிந்தோ, தெரியாமலோ எப்போதும் கலகம் மற்றும் குழப்பத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த குணம் சிலசமயங்களில் அவர்களை ஆபத்தானவர்களாக மாற்றக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகாரர்கள் எப்போதும் கலகத்திற்கான காரணமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் அளவிலா கோபத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் போர் மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்காம். அவர்கள் இயல்பிலேயே தலைமைத்துவம் கொண்டவர்கள், ஆனால் சில சமயங்களில் அவர்களின் பிடிவாதமும், மனக்கிளர்ச்சியும் மோதல்களை உருவாக்கும்.
அவர்கள் குழப்பத்தை உருவாக்கும் ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பதால், அவர்கள் ஒரு பிரச்சினையை தொடங்கிவிட்டால், அதிலிருந்து பின்வாங்க முடியாது. அவர்கள் அதை உள்நோக்கத்துடன் செய்வதில்லை. ஆனால் தங்கள் கருத்து சரியென நிரூபிக்க வேண்டுமென்ற அவர்களின் ஆர்வம் அவர்களை ஆபத்தான கலக்காரர்களாக மாற்றுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கிரகங்களின் இளவரசரும், தகவல் தொடர்பின் அதிபதியுமான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் பேசுவதையும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
அவர்கள் முன்பின் சிந்திக்காமல் ஏதாவது ஒன்றை பேசி விடுவார்கள், அது மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். மற்ற ராசிக்காரர்களை விட இவர்கள் மிகவும் வாதாடுபவர்கள் என்பதாலும், அவர்களின் கேலி செய்யும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை காயப்படுத்தும் என்பதாலும், அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் அல்லது சிக்கலை உருவாக்குவார்கள்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் தற்பெருமைக்கும், ஆதிக்கம் செலுத்தும் தன்மைக்கும் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் எப்போதும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் போதிய கவனத்தை பெறாத போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கலகங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காதபோது அவர்கள் மிக எளிதாக கோபப்படுவார்கள்.
அவர்கள் குழப்பத்தை ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பதால், அவர்களுக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்காத போது, யாருடன் வேண்டுமென்றாலும் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். அவர்கள் கலகத்தை உருவாக்க வேண்டுமென்று இதை செய்வதில்லை, ஆனால் அவர்கள் நினைத்த அங்கீகாரத்தை அடைய இதை செய்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தீவிரமானவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் உணருவார்கள், மேலும் அவர்களின் உணர்ச்சிகள் சில நேரங்களில் பெரிய வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.
மோதல்களை ஏற்படுத்தும் ராசிகளில் இவர்கள் ஒருவராக இருப்பதால், சமூகப் பிரச்சினைகளில் அவர்கள் கடுமையான வாதங்களை உருவாக்க பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒருபோதும் சண்டையிட விரும்ப மாட்டார்கள், ஆனால் உணர்ச்சிவசப்படும் போது அவர்களின் மூளை வேலை செய்யாமல் போகிறது, அதனால் கலகங்களை உருவாக்குவார்கள், இது சூடான வாதங்களுக்கு வழிவகுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












