Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
Mushroom Pattani Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்தியை செய்யும் போதெல்லாம், அதற்கான சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது பெரிய வேலையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? அப்படியானால் அந்த காளானை வாங்கி, அதனுடன் பட்டாணியை சேர்த்து ஒரு அட்டகாசமான காளான் மசாலாவை செய்யுங்கள்.

இந்த காளான் பட்டாணி மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சுவையில் காளான் மசாலாவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 சப்பாத்தி அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி இந்த காளான் மசாலாவையும் செய்து கொடுக்க சொல்வார்கள். இந்த காளான் பட்டாணி மசாலா சப்பாத்தி மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு காளான் பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் நெய்
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய் (கீறியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- அரை கப் தக்காளி(அரைத்தது)
- தேவையான அளவு உப்பு
- ½ கப் பச்சை பட்டாணி (வேகவைத்த புதிய பட்டாணி)
- 200 கிராம் காளான்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைக் கழுவி, நறுக்கித் தனியாக எடுத்து வைக்கவும். தக்காளியின் விதைகளை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- காளான்களைக் கழுவித் தனியாக எடுத்து வைக்கவும். மசாலாவில் சேர்க்கும் போது நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் சீரகம் சேர்த்துப் பொரியவிடவும்.
- வெங்காயம் மற்றும் மிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்ததாக அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் கரம் மசாலா, கொத்தமல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கி மணம் வந்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் வேக வைத்த பட்டாணி மற்றும் காளானைச் சேர்க்கவும். மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- மூடி போட்டு, காளான் மென்மையாகும் வரை, ஆனால் குழைந்துவிடாமல், குறைந்த தீயில் வேக வைக்கவும். இடையிடையே அடிபிடிக்கமால் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும்.
- காளான்கள் வேகும்போது, அவற்றிலிருந்து தண்ணீர் வெளியாகும், எனவே அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். காளான்கள் மென்மையாகும் போது, மூடியைத் திறந்து நன்றாகக் கலக்கவும். சற்று அதிக தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
- கிரேவி நன்கு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறினால் காளான் பட்டாணி மசாலா ரெடி.
- இது சப்பாத்தி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக
இருக்கும்.
-



Click it and Unblock the Notifications