கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும்

Posted By:

Krishna Jayanti Special Paneer Payasam Recipe in Tamil: கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே விசேஷமான உணவுகளை செய்து அதை குழந்தை கிருஷ்ணருக்கு படைப்பது வழக்கமாகும். இந்த வருடன் கிருஷ்ண ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை, அதிரசம் போன்றவற்றத்தைத்தான் செய்து பிரசாதமாக வழிபடுவோம். அதேசமயம் இந்த நாளில் பாயாசம் வகைகளை செய்வது வழக்கமாகும்.

Krishna Jayanti Special Paneer Payasam Recipe How to Make at Home in Tamil

பாயாசம் என்றால் பொதுவாக சேமியா பாயாசம், பால் பாயாசம் அல்லது அரிசி பாயாசம் போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் வழக்கமான பாயாசம் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பாயாசம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பன்னீர் பாயாசத்தை செய்து பாருங்கள். பன்னீரை வைத்து பொதுவாக சில்லி, மஞ்சூரியன், பட்டர் மசாலா போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் பன்னீரை வைத்து ஒரு அட்டகாசமான பாயாசத்தை செய்யலாம்.

உங்களுக்கு பன்னீர் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3/4 கப் துருவிய மென்மையான பன்னீர்
- 1/2 கப் சர்க்கரை
- 3 கப் பால்
- பொடியாக நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம்
- கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
- ஒரு சிட்டிகை உப்பு
- 1 ஸ்பூன் நெய்

செய்முறை:

- ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.

- நெய் சூடானதும், அதில் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

- சர்க்கரை உருகி, வெளிர் நிறமாக மாறத் தொடங்கும் வரை கிளறவும்.

- சர்க்கரை முழுமையாக உருகி, அதன் பாகு நிறம் மாறும்போது அதாவது வெளிர் நிற வெல்லப்பாகு போல மாறுவதுதான் கேரமல் ஆகும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, சூடான பாலை கவனமாகச் சேர்க்கவும்.

- பால் பொங்கி நுரைத்து வரும்வரை காத்திருக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து பாயசம் நன்றாகக் கொதிக்கட்டும். அவ்வப்போது நன்றாகக் கலக்கிவிடவும்.

- பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- அதன்பின் நன்றாக துருவிய பன்னீரை சேர்த்து, அவ்வப்போது கலக்கியபடியே 2-3 நிமிடங்கள் பாயசத்தைக் கொதிக்கவிடவும்.

- அதேசமயம் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

- பன்னீர் பாயாசத்துடன் நன்கு கலந்ததும் வறுத்த பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புகளைத் தூவி, நன்றாகக் கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 4, 2026, 9:46 [IST]
Desktop Bottom Promotion