Latest Updates
-
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Mars Venus Forms Navpancham Rajyog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் உள்ளார். அதே வேளையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் கேந்திர நிலை நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், செல்வம் மற்றும் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காணக்கூடும். ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் 5 மற்றும் 9 ஆவது வீடுகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் போது, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கும். இப்போது செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தினால் நல்ல செல்வத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைக் கொண்டு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிய தொடர்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கலாம். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் தொழிலில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வேலை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




