Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 நாள் குடிங்க.. உடல் எடை, பிபி, சுகர் எல்லாம் தானா குறையும்.. -
நவம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வழக்கத்தை விட வீட்ல எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்... -
இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த பொருட்களை மிக்சி ஜாரில் தெரியாம கூட அரைச்சுராதீங்க - இல்லனா மிக்சி வீணாப்போயிரும் -
முகத்தில் பிக்மென்டேஷன் பிரச்சனையா? அப்ப இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி எது? அதன் பெயர் என்ன தெரியுமா?
தற்போது உலகின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் வங்கிகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. வங்கிகள் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாகச் செயல்படுகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியை வங்கிகள் எவ்வாறு ஈடுசெய்கின்றன என்பதை உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிவார்கள். 2008-ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி, கோவிட் பெருந்தொற்று மற்றும் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் வீழ்ச்சி என, உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் சூழல்கள் ஏற்பட்ட போது, வங்கிகளின் அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன.

இந்தியாவில் அரசு, தனியார் மற்றும் வட்டார வங்கிகள் என 128 வங்கிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, நமது வங்கி அமைப்பு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடங்கியது. தற்போது SBI, IOB, PNB என பல பிரபலமான வங்கிகள் இருந்தாலும் இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி இவற்றில் எதுவுமில்லை. 1770-ல், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் முதல் வங்கியான பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தானை(Bank Of Hindustan) தொடங்கினர். அதன் தலைமையகம் அப்போதைய தலைநகரான கல்கத்தாவில் அமைந்திருந்தது.
இந்தியாவின் முதல் வங்கியின் தொடக்கமும், முடிவும்
1770-ல் தொடங்கப்பட்ட இந்த வங்கி 1832-ல் செயல்படுவதை நிறுத்தியது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், மொத்தம் 600 வங்கிகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் அவற்றில் சில மட்டுமே நிலைத்து நின்றன. பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் உருவான பிறகு, ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, Oudh Commercial Bank மற்றும் பேங்க் ஆஃப் பெங்கால், மெட்ராஸ், பம்பாய் போன்ற பிற வங்கிகளும் தொடங்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்கள் பேங்க் ஆஃப் பெங்கால், பேங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் என மூன்று வங்கிகளை நிறுவினர். இந்த மூன்று நிதி நிறுவனங்களும் ஜனாதிபதி வங்கிகள் என்று அழைக்கப்பட்டன. அதன்பின், 1921-ல், இந்த ஜனாதிபதி வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு 'இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்பட்டன.
முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கி
இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா 1955-ல் தேசியமயமாக்கப்பட்டு, அன்று முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இந்த வங்கி தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய வங்கிகள் நிலைத்து நிற்க முடியாமல் போனதற்கு, இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் குறைவாக இருப்பது, நிர்வாகத் திறன்கள் இல்லாமை, மற்றும் அதிக நேரம் எடுக்கும் செயல்பாடுகளால் ஏற்படும் மனிதத் தவறுகள் போன்ற பல காரணங்கள் இருந்தன.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, எஞ்சியிருந்த இந்திய வங்கிகள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருந்தன. கிராமப்பகுதிகளில் வசித்த மக்கள் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்கியதால், இது அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக மாறியது. மக்களின் இந்த பிரச்சினையைத் தீர்க்க, இந்திய அரசு 1949-ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வங்கிகளை தேசியமயமாக்கியது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி 1949-ல் தேசியமயமாக்கப்பட்டது. 1969 முதல் 1991-க்கு இடையில் 14 இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அவற்றில் முக்கியமானவை. வங்கிகளின் தேசியமயமாக்கல், இந்தியா அதிக நிதியைத் திரட்டவும், செயல்திறனை அதிகரிக்கவும், கிராமப்புற மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வங்கிகளின் லாபத்தை உயர்த்தவும் உதவியது.



Click it and Unblock the Notifications

