Latest Updates
-
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வழக்கத்தை விட வீட்ல எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்... -
இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த பொருட்களை மிக்சி ஜாரில் தெரியாம கூட அரைச்சுராதீங்க - இல்லனா மிக்சி வீணாப்போயிரும் -
முகத்தில் பிக்மென்டேஷன் பிரச்சனையா? அப்ப இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க.. -
திருப்பதியில் பக்தர்கள் ஏன் மொட்டையடிக்கிறார்கள்? அதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
விருச்சிகம் செல்லும் புதன்: டிசம்பரில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவின் 'தூங்கும் மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இந்த பெயர் ஏன் வந்தது தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க..
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
December 2026 Horoscope: 2026--ன் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. ஜோதிடரீதியாக டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. வரப்போகிற டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிரக மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. குறிப்பாக சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவது மிகவும் முக்கியமான கிரக மாற்றமாகக் கருதப்படுகிறது. பல கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதால், சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கப்போவதில்லை. பெரும்பாலும், நிதி இழப்புகள், தேவையற்ற செலவுகள், வருமானமின்மை மற்றும் பணத்தைச் சேமிப்பதில் போன்ற தடைகள் ஏற்படலாம். உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் காரணமாக, மகர ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையிடம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் பல தடைகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் நிதி விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், முதலீடு செய்வதற்கு முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், இந்த நேரத்தில் தொழில் சம்பந்தமான எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலையிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், அவர்களின் பேச்சு மிகவும் கடுமையானதாக மாறலாம், இது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.
திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். விரைவில் காலம் மாறும்.
விருச்சிகம்
டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரப்போவதில்லை. இந்த மாதத்தில் வாய்ப்புகளை விட சவால்கள் அதிகமாக இருக்கும். இதனால் மாதம் முழுவதும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காதல் உறவுகளில் அவசரப்பட வேண்டாம், இல்லையெனில் அவர்கள் தங்கள் உறவை இழக்க நேரிடும்.
அவர்கள் தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். சில நண்பர்களால் துரோகத்தை எதிர்கொள்ள நேரிடலாம். மேலும் அவர்களின் உடல்நலம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லையெனில் பெரிய தொகையை செலவழிக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் கிரகங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்த மாதம் மன அழுத்தம் நிறைந்த மாதமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

