Latest Updates
-
விருச்சிகம் செல்லும் புதன்: டிசம்பரில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவின் 'தூங்கும் மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இந்த பெயர் ஏன் வந்தது தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க.. -
இந்த 6 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா சிறுநீரக கற்கள் வந்துவிடும்.. -
பெங்காலி ஸ்டைல் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்! -
உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா? -
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
திருப்பதியில் பக்தர்கள் ஏன் மொட்டையடிக்கிறார்கள்? அதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
திருப்பதி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மொட்டையும், லட்டும்தான். ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலையின் புனிதமான ஏழு மலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏறி, தங்கள் தலைமுடியை காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். மொட்டையடிப்பது என்று அழைக்கப்படும் இந்த சடங்கு, அங்கு பின்பற்றப்படும் மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.

திருமலை வெங்கடேஸ்வரர் சன்னதியில் தங்கள் தலைமுடியை தானம் செய்வதன் மூலம், பக்தர்கள் ஆழ்ந்த சரணாகதியை வெளிப்படுத்துவதோடு, ஆன்மீகத்துடன் ஆழமான தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். திருப்பதியில் பக்தர்கள் முடி தானம் செய்வதன் ஆன்மீக மற்றும் புராண முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அகங்காரத்தை அழித்தல்
இந்து மதத்தில், தலைமுடி என்பது அகங்காரம், தற்பெருமை, அழகு, பற்று மற்றும் கடந்த கால கர்மவினைகளைக் குறிக்கிறது. அதை காணிக்கையாக வழங்குவது என்பது, அகங்காரத்தையும், உணர்வுப்பூர்வமான சுமைகளையும், விருப்பங்களையும் கைவிடுவதைக் குறிப்பதன் ஒரு குறியீடாகும். தலைமுடியைத் துறப்பதன் மூலம், ஒரு பக்தர் 'இறைவனின் முன்னிலையில் எனது புறத்தோற்றத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.' என்பதை உணர்த்துகிறார்.
சமத்துவமும் பணிவும்
திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்துவதில் உள்ள மிக அழகான அம்சம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் அனைவரும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் ஒரே மாதிரியான தரைத்தளத்தில், ஒரே எளிய துணியைப் போர்த்திக்கொண்டு அமர்ந்து மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். இந்தச் செயல் சமூக எல்லைகளைக் கரைத்து, பணிவை வலியுறுத்துகிறது.
நேர்த்திக்கடன்
பக்தர்கள் பெரும்பாலும் திருப்பதியில் மொட்டையடிப்பதன் மூலம் தங்கள் நேர்த்திக்கடனைச் நிறைவேற்றுகிறார்கள். ஒரு குழந்தை நோயிலிருந்து குணமடைந்தாலோ, ஒரு குடும்பம் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டாலோ அல்லது வாழ்க்கையில் ஒரு முக்கிய இலட்சியத்தை அடைந்தாலோ, அந்த குடும்பத்தினர் திருப்பதிக்குச் சென்று, தங்கள் தலைமுடியை மொட்டையடித்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.
இளவரசி நீலா தேவியின் வரலாறு
திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம், பாலாஜியின் திருக்கல்யாண நிகழ்வோடு தொடர்புடையது. இதன்படி, கலியுகத்தில் வெங்கடேஸ்வரர் பூமிக்கு எழுந்தருளியபோது, ஒரு இடையன் அவரது தலையில் தாக்க, அதனால் இறைவனின் தலைமுடியின் ஒரு பகுதி உதிர்ந்து போனது. இதைக் கண்ட நீலா தேவி எனும் தேவலோக இளவரசி, இறைவனின் திவ்யமான அழகில் ஏற்பட்ட இந்த குறையைக் கண்டு வருந்தினார். இறைவனின் இழந்த முடியை மறைப்பதற்காக, அவர் தயக்கமின்றி தனது சொந்த தலைமுடியையே மழித்து, தனது தெய்வீக சக்தியால் அதை இறைவனின் தலையில் பொருத்தினார். அவரது இந்த தன்னலமற்ற தியாகத்தால் நெகிழ்ந்த இறைவன், தமக்குத் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தும் பக்தர்களுக்குத் தமது தெய்வீக ஆசிகள் கிடைக்கும் என்று அருளினார். அன்று முதல், திருமலையில் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் ஒரு புனிதமான மரபாகத் திகழ்கிறது.
காணிக்கையாகக் கொடுக்கப்படும் முடி என்ன செய்யப்படுகிறது?
திருப்பதியில் எதுவும் வீணாவதில்லை. திருப்பதி தேவஸ்தானம் முடியைச் சேகரித்து, சுத்தம் செய்து, தரம் பிரித்து, அதிகாரப்பூர்வ ஆன்லைன் டெண்டர்கள் மூலம் உலகளவில் ஏலம் விடுகிறது. திருப்பதி முடி நூறு சதவீதம் இயற்கையானது, இரசாயனங்கள் அற்றது மற்றும் பதப்படுத்தப்படாதது என்பதால், அது உலகளவில் 'கருப்புத் தங்கம்' என்று போற்றப்படுகிறது. இந்த முடியை ஏலம் விடுவதன் மூலம், திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டுகிறது. பின்னர் இந்தப் பணம், இலவச மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்களை நடத்துவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications

