Latest Updates
-
பெங்காலி ஸ்டைல் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்! -
உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா? -
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க.. -
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க!
இந்த 6 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா சிறுநீரக கற்கள் வந்துவிடும்..
Kidney Stones In Tamil: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக சிறுநீரக கல் பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் தற்போது இது அதிகரித்து வரும் பொதுவான பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது.
பொதுவாக எப்போது ஒருவரது சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற கனிமங்கள் சேரத் தொடங்குகிறதோ, அப்போது சிறுநீரக கல் உருவாகிறது. இப்படி சிறுநீரகங்களில் கற்கள் இருந்தால், அது சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி, எரிச்சல் உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

பெரும்பாலும் இப்படியான சிறுநீரக கற்கள் உணவுகளின் மூலம் தான் உருவாகிறது. இருந்தாலும் சில சமயங்களில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் போதுமான நீர் அருந்துவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க முடியும். ஆயினும் சிறுநீரக கற்கள் வந்த பின் அதை கரைக்க முயற்சிப்பதை விட, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து வருவது மிகவும் சிறந்தது.
இப்போது சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை என்பதைக் காண்போம். இந்த உணவுகளை உங்களின் உணவில் தவிர்த்து வந்தால், நிச்சயம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
1. உப்பு நிறைந்த உணவுகள்
ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் சோடியத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இப்படி உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளை எடுக்கும் போது, அது சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரித்து, கால்சியம் தொடர்பான கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இப்படியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. பசலைக்கீரை
கீரைகளில் பசலைக்கீரை ஏராளமான சத்துக்கள் கொண்டிருந்தாலும், அவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. எனவே இந்த பசலைக்கீரையை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரித்துவிடும். அதற்காக பசலைக்கீரையை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அளவாக சேர்த்து வந்தாலே போதுமானது.
3. பீட்ரூட்
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். என்ன தான் பீட்ரூட் உடலில் இரத்தத்தை அதிகமாக்குவதற்கு உதவி புரிந்தாலும், பீட்ரூட்டிலும் ஆக்ஸலேட்டுகள் உள்ளன. எனவே பீட்ரூட்டை ஒருவர் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரித்துவிடும்.
4. சாக்லேட் மற்றும் கொக்கோ
சால்லேட் மற்றும் கொக்கோவிலும் ஆக்ஸலேட்டுகள் உள்ளன. இந்த சாக்லேட்டுகளை ஒருவர் அளவுக்க அதிகமாக உட்கொண்டால், அது கால்சியம் ஆக்ஸலேட் கற்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே அதிகளவு சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
5. அசைவ உணவுகள்
அசைல உணவுகளான மாட்டிறைச்சி, சிக்கன், மீன் போன்ற விலங்குகளின் புரோட்டீன் நிறைந்த உணவகளும் சிறுநீரில் யூரிக் அமில அளவை அதிகரித்துவிடும். இதன் விளைவாக அது யூரிக் அமிலம் தொடர்பான கற்களின் அபாயத்தை அதிகரித்து விடும். சில சமயங்களில் விலங்குகளின் புரோட்டீனை அதிகம் எடுத்தால், அது கால்சியம் தொடர்பான கற்களின் ன அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
6. குளிர் பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள்
செயற்கை குளிர்பானங்களில் சர்க்கரை மற்றும் ஃபுருக்டோஸ் அதிகளவில் உள்ளன. இவை சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தாகத்தின் போது செயற்கை பழச்சாறுகளை அருந்துவதற்கு பதிலாக நீரை அதிகம் அருந்துங்கள்.
சிறுநீரக கற்களைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
1. எலுமிச்சை - இதில் உள்ள சிட்ரேட் குறிப்பிட்ட வகையான சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
2. வெள்ளரிக்காய் - இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.
3. தர்பூசணி - இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் நீர்ச்சத்தின் அளவை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
4. ஆரஞ்சு - இதில் சிட்ரேட் மற்றும் வைட்டமின் சி உள்ளதால், சம அளவில் உட்கொண்டு வர சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கலாம்.
5. தயிர் - கால்சியம் அதிகம் நிறைந்த தயிரை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது ஆக்சலேட் உறிஞ்சப்படுவதைக் குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
