Latest Updates
-
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க! -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க..
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க..
Hair Masks For Dry Hair In Tamil: உங்கள் தலைமுடி எப்போதும் வறண்டு, ஆரோக்கியமற்றதாகவும், அதிகம் சிக்கல் ஏற்படுவதாகவும் உள்ளதா? எவ்வளவுதான் தலைமுடியை பராமரித்தாலும் முடி உடைதல், முடி வெடிப்பு, முடி வறட்சி போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கிறதா? அப்படியானால் இதற்கு அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் செய்வது, ஹீட் கருவிகளைப் பயன்படுத்துவது, கெமிக்கல் நிறைந்த முடி பராமரிப்பு பொருட்களின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இதனால் தலைமுடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, தலைமுடி வறண்டு, பொலிவிழந்து காணப்படலாம்.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பார்லர் சென்று விலையுயர்ந்த தலைமுடி சிகிச்சைகளை மட்டுமே நாட வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க்குகளைத் தயாரித்து பயன்படுத்தலாம். குறிப்பாக, தேங்காய் எண்ணெய், தயிர், கற்றாழை, தேன், வாழைப்பழம் போன்ற பொருட்கள் தலைமுடிக்கு ஈரப்பதம் அளிக்கவும், வறட்சியைக் குறைக்கவும் உதவக்கூடும். இப்போது வறண்ட மற்றும் சேதமடைந்த தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் 5 ஹேர் மாஸ்க்குகள் குறித்து காண்போம்.
1. வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் தலைமுடியை லேசாக ஈரப்படுத்தி, தயாரித்து வைத்துள்ளதை தலைமுடியில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடி ஈரப்பதத்துடனும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
2. தேங்காய் பால் மற்றும் கற்றாழை மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
3. ஷியா பட்டர் மற்றும் அர்கன் ஆயில் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் உருக்கிய ஷியா பட்டரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அர்கன் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடி முழுவதும் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. அவகேடோ மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த அவகேடோவை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் நுனி வரை தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
5. தயிர் மற்றும் முட்டை மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடியில் தடவி, ஈரமான ஷவர் கேப் கொண்டு தலைமுடியை கட்டி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
