Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வியாழக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். எனவே, எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்று பண விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்று உங்கள் பழைய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். பண விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
ரிஷபம்
இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள சில வேலைகள் முடிவடையும். இன்று உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவை எடுக்கலாம், அது உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்கள் ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணம் இன்று அனைவரையும் ஈர்க்கும். விரைவில் நல்ல பலன்களைப் பெறலாம். வியாபாரிகள் பணி நிமித்தமாக சிறு பயணம் செல்ல வேண்டி இருக்கும். இன்று நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நிதி நிலையில் இன்று பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கடகம்
இன்று குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். எனவே, உங்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். வணிகர்கள் நிலுவையில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்க முயற்சிக்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
இன்று வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மிகவும் சிந்தனையுடன் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் குழநதைகளின் கல்வி தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென பயணம் செய்ய நேரிடலாம். இது லாபத்தைக் கொடுக்கலாம்.
கன்னி
இன்று வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்யாமல் இருந்தால் நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வேலையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
துலாம்
இன்று உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது நீண்ட கால பண பிரச்சினை இன்று தீர்க்கப்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள உங்கள் வேலைகளை இன்றே முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவடையும். இன்று உங்களுக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
இன்று வேலையில் இருப்பவர்களுக்கு சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். கூட்டாக வியாபாரம் செய்பவர்கள் மோதல்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கடினமாக உழைக்க தயங்காமல் இருந்தால் நல்லது. இன்றைய உங்கள் கடின உழைப்பின் பலனாக முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு
இன்று அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கலாம். தொழிலில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்களுக்கு, இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும். திடீர் செலவுகள் அதிகரிப்பதால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். உங்கள் குடும்பத்தின் சில உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
மகரம்
இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று பெரிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்று வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்று தேவையற்ற விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். குடும்பத்தால் உதவியுடன் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று பெரிய மாற்றங்கள் இருக்காது.
கும்பம்
இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்க முடியும். உங்கள் துணையின் அன்பான நடத்தை உங்களைச் சிறப்பாக உணர வைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். இன்று, உயர் அதிகாரிகளுடன் உங்கள் வேலை தொடர்பான முக்கிய விவாதங்களும் நடைபெறலாம். சிறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை வளர்க்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், பண விஷயங்களில் எந்த தவறான முடியும் எடுக்காதீர்கள்.
மீனம்
உங்கள் வாழ்க்கைத் துணையுடனான மனகசப்பை பேசி தீர்க்க முயற்சிக்கவும். தேவையற்ற ஈகோ உங்கள் உறவை மேலும் பலவீனமாக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் நிலுவையில் உள்ள லாபத்தைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். திடீர் பண வரவைப் பெறலாம். தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தைச் செலவிடுவதை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
