Latest Updates
-
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவின் டாப் 10 பழமையான நகரங்கள் என்னென்ன தெரியுமா? இதில் 2 நகரங்கள் தமிழ்நாட்டில் இருக்காம் -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம் -
கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட... -
நவம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்!
Men's Skin Care In Tamil: பெண்கள் மட்டும்தான் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களிடம் உள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய சருமத்தைப் பராமரிப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. சிலர் முகத்தைக் கழுவுவதற்கு ஏதாவது ஒரு சோப்பைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலரோ வீட்டில் மனைவி, அம்மா அல்லது சகோதரி பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் போன்றவற்றையே பயன்படுத்துவார்கள். ஆனால் பெண்களுக்குப் பொருத்தமான சருமப் பராமரிப்புப் பொருட்கள் ஆண்களுக்கும் பொருந்துமா?

ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து சில வகைகளில் வேறுபடுகிறது. குறிப்பாக, சருமத்தின் தடிமன், எண்ணெய் சுரப்பு, முகப்பரு ஏற்படும் தன்மை மற்றும் வெளிப்புறச் சூழல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்கள் தங்களுக்கென தனிப்பட்ட சரும பராமரிப்பு வழக்கத்தைக் கொள்வது அவசியம் என்கிறார் சரும மருத்துவர் டாக்டர் மோனிஷா அரவிந்த். மேலும் ஆண்கள் தினமும் பயன்படுத்த வேண்டிய அடிப்படை சருமப் பராமரிப்பு பொருட்கள் என்னென்ன என்பது குறித்தும் டாக்டர் மோனிஷா அரவிந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?
பொதுவாக இந்திய ஆண்களின் சருமம் பெண்களுடன் ஒப்பிடும்போது சற்று தடிமனாக இருக்கலாம். மேலும், ஆண்கள் அதிக நேரம் வெயில், தூசி மற்றும் காற்று மாசுபாடு போன்ற வெளிப்புறச் சூழல்களில் இருக்க வேண்டியிருக்கும். இதனால் சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிப்பது, துளைகள் அடைபடுவது மற்றும் முகப்பரு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, வீட்டில் இருக்கும் பெண்களின் சருமப் பராமரிப்புப் பொருட்களை அப்படியே பயன்படுத்துவதை விட, உங்களுடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
1. ஆண்களுக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது அவசியம்
"ஆண்கள் தினமும் முகத்தைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தைக் கழுவுவது போதுமானது. அதிகமாக வியர்த்த பிறகு தேவைக்கேற்ப முகத்தைக் கழுவலாம்.
எண்ணெய் பசை மற்றும் முகப்பரு பிரச்சினை இருப்பவர்கள் சாலிசிலிக் அமிலம் அல்லது கிளைகாலிக் அமிலம் கொண்ட ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கலாம். இவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், துளைகள் அடைபடுவதைக் குறைக்கவும் உதவும். அதே சமயம், வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் மென்மையான ஜென்டில் கிளென்சர்களைப் பயன்படுத்துவது நல்லது." என்று டாக்டர் கூறினார்.
2. மாய்ஸ்சரைசரைத் தவிர்க்காதீர்கள்
"ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பதால் மாய்ஸ்சரைசர் தேவையில்லை என்று நினைப்பது தவறு. சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மாய்ஸ்சரைசர் மிகவும் அவசியம்.
காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள் ஜெல் அல்லது லோஷன் வகை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தில் அதிகப்படியான பிசுபிசுப்பை ஏற்படுத்தாமல் ஈரப்பதத்தை வழங்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் கிரீம் வகை மாய்ஸ்சரைசர்களைத் தேர்ந்தெடுக்கலாம். செராமைட்ஸ், பெப்டைட்ஸ், நியாசினமைடு மற்றும் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட மாய்ஸ்சரைசர்கள் சருமப் பராமரிப்புக்கு உதவக்கூடும். முகப்பரு ஏற்படும் சருமம் கொண்டவர்கள் துளைகளை அடைக்காத, அதாவது நான்-காமெடோஜெனிக் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சைட்டோபியால் ஐரிஸ் சாலிசிலிக் ஆசிட் இந்த காம்பினேஷனில் இருக்கும் மாய்ஸ்சரைசர்களைத் தேர்ந்தெடுக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.
3. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்
"ஆண்களுக்கு சன்ஸ்க்ரீன் மிகவும் முக்கியம். எக்காரணம் கொண்டும் அதை தவிர்க்கக்கூடாது. குறிப்பாக, பைக் ஓட்டுபவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் சூரியனின் புறஊதாக் கதிர்களால் சரும பாதிப்புகளை தவிர்க்க ஜிங்க் ஆக்ஸைடு கொண்ட சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். அதாவது நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்கள் SPF 50 கொண்ட சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதுவே வெளியே வெயிலில் அதிகம் செல்லமாட்டேன் என்பவர்கள் மற்றும் புதிதாக சரும பராமரிப்பு மேற்கொள்பவர்கள் தினமும் SPF 30 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
4. உதடுகளுக்கும் லிப் பாம் அவசியம்
"பல ஆண்கள் லிப் பாம் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் உதடுகளும் சருமத்தின் ஒரு பகுதிதான். அவை வறண்டு போவது, வெடிப்பது மற்றும் அதிகப்படியான நிறமாற்றம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனைத் தவிர்க்க பகல் நேரத்தில் SPF பாதுகாப்பு கொண்ட லிப் பாம் பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பும் லிப் பாம் பயன்படுத்துவது உதடுகளின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்." என்று டாக்டர் கூறினார்.
5. கருவளையங்களுக்கு அண்டர் ஐ கிரீம் பயன்படுத்தலாம்
"ஆண்களிடம் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது பொதுவான பிரச்சினையாகும். இதற்கு காப்ஃபைன், வைட்டமின் கே, ஹைலூரோனிக் அமிலம் அல்லது செராமைட்ஸ் கொண்ட அண்டர் ஐ கிரீம்களைப் பயன்படுத்தலாம்." என்று டாக்டர் கூறினார்.
6. சரும நிறமாற்றத்திற்கு நியாசினமைடு மற்றும் வைட்டமின் சி
முகத்தில் ஆங்காங்கே கருமையான திட்டுகள் இருந்தால், இரவு தூங்கும் போது சீரம் அல்லது க்ரீம் பயன்படுத்தலாம். அதுவும் கிளைகாலிக் அல்லது நியாசினமைட் அல்லது ஹைலூரோனிக் அல்லது மூன்றும் கலந்திருப்பதைப் பயன்படுத்தலாம். வைட்டமின் சி கூட பயன்படுத்தலாம். ஆனால் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அதுவும் முதன் முதலாக பயன்படுத்த தொடங்குவதாக இருந்தால், நியாசினமைடு அல்லது வைட்டமின் சி பயன்படுத்தலாம். ஏனெனில் இவை சருமத்தை அதிகம் எரிச்சலூட்டாது. ஒருவேளை முகப்பரு அதிகம் வருமானால், வைட்டமின் சி பயன்படுத்தாதீர்கள், வேண்டுமானால் நியாசினமைடு பயன்படுத்துங்கள்.
7. முகப்பரு பிரச்சினை இருப்பவர்கள் ரெட்டினால் பயன்படுத்தலாமா?
எண்ணெய் பசை மற்றும் முகப்பரு பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் ரெட்டினால் போன்ற சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். இவை சருமத்தின் புதுப்பித்தல் செயல்முறைக்கு உதவக்கூடும்.
ரெட்டினால் பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மெதுவாகத் தொடங்க வேண்டும். சருமத்தில் வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படாமல் இருக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதும், பகல் நேரத்தில் சன்ஸ்கிரீன் அணிவதும் அவசியம். அதிக எரிச்சல் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications
