Latest Updates
-
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம் -
கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட... -
நவம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
2026-ம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணத்தையும், வெற்றியையும் அள்ளித் தரப்போகுது! -
ராகு-கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
5 தக்காளி இருந்தா இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும் -
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
Potato Butter Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? இந்த டிபன்களுக்கு எப்போதும் உருளைக்கிழங்கு குருமா அல்லது பட்டாணி குருமாதான் செய்வீர்களா? ஒரே மாதிரியான சைடிஷ் சாப்பிட்து போரடிக்குதா? ஏதாவது புதுசா ஒரு சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பட்டரும் உள்ளதா? அப்படினா அதை வைத்து சூப்பரான உருளைக்கிழங்கு பட்டர் மசாலாவை செய்யுங்க.

இந்த உருளைக்கிழங்கு பட்டர் மசாலா செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் அட்டகாசமானது. இந்த பட்டர் மசாலா ஹோட்டலில் கிடைக்கும் சைடிஷ் போல வேற லெவல் சுவையில் இருக்கும். உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடித்த காய்கறியாக இருப்பதால் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உருளைக்கிழங்கு பட்டர் மசாலா தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 1 கப் (தோல் நீக்கி, சிறு துண்டுகளாக
நறுக்கியது)
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
- இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1 [நீளமாக கீறியது]
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 ஸ்பூன்
- தக்காளி விழுது - 1 ½ கப்
- முந்திரி விழுது - ½ கப்
- தயிர் - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 3
- பிரிஞ்சி இலை - 1
- கிராம்பு - 3
- பட்டை - ½ துண்டு
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
- சீரகத் தூள் - ½ ஸ்பூன்
- மல்லித் தூள் - ½ ஸ்பூன்
- மிளகுத் தூள் - ½ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெண்ணெய் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்குகளை அரைவேக்காடாக வேகவைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெயைச் சூடாக்கி, அதில் சீரகம், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை மற்றும் பச்சை ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் வெங்காயத்தைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் உப்பு, மல்லித்தூள், சீரகம், மிளகு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் தக்காளி விழுது சேர்த்து நன்றாகக் கலந்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதன்பின் கரம் மசாலா தூள் மற்றும் கசக்கி வைத்த கசூரி மேத்தியைச் சேர்க்கவும்.
- பிறகு தயிர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். வெண்ணெய் சேர்த்து அலங்கரித்து, சாதம், சப்பாத்தி, நான், இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
