Latest Updates
-
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..! -
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! -
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ! -
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க
ஒருவர் நம்மை பார்த்தவுடன் அவர்கள் கவனிப்பது நம்முடைய சிரிப்பைதான். நம்முடைய தோற்றம் மற்றும் வசீகரத்தை நிர்ணயிப்பதில் நமது புன்னகை முக்கியப்பங்கு வகிக்கிறது. அழகான கறையில்லாத பற்களைக் கொண்டிருப்பது என்பது, அவை கச்சிதமாகவும், சரியான வடிவத்திலும் இருப்பதை விட மேலானது. அவை வலிமையாகவும், முத்துப்போல் வெண்மையாகவும் இருக்க வேண்டும். முத்துப்போன்ற வெண்மையான பற்கள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

பல் துலக்குவது முதல் ஃப்ளாஸ் செய்வது மற்றும் பல் பரிசோதனைகள் வரை, நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் பற்களின் எனாமல் வலுப்பெறுகிறதா அல்லது சிதைக்கப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது. வலுவான மற்றும் வெண்மையான பற்கள் பல் துலக்குவதால் மட்டுமல்ல, சில உணவுகளாலும் உருவாக்கப்படுகின்றன. பிரகாசமான மற்றும் வெண்மையான பற்களுக்காக தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பச்சை இலை காய்கறிகள்
கீரை வகைகள், முட்டைக்கோஸ், வெந்தயக்கீரை மற்றும் பிற பச்சை இலை காய்கறிகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகமாக உள்ளன. இவை பற்களின் எனாமல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் உள்ள நார்ச்சத்து, உணவை நன்றாக மென்று சாப்பிடத் தூண்டுகிறது. இது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, பற்களை மென்மையாகச் சுத்தம் செய்ய உதவுகிறது. எனவே, தினமும் ஏதேனும் ஒரு வகை பச்சை இலை காய்கறியை உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பால்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றுகிறது. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இவை, அமிலத் தாக்குதல்களுக்குப் பிறகு பற்களின் எனாமலை மீண்டும் கட்டமைக்கவும், உறுதிப்படுத்தவும் உதவும் மிக முக்கியமான தாதுக்களாகும். மேலும், சீஸ், நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை உட்கொள்வது உமிழ்நீர் சுரப்பைத் தூண்டி, வாயில் தங்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற உதவுகிறது.
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், வால்நட், நிலக்கடலை மற்றும் சியா விதைகள், பூசணி விதைகள் போன்றவை ஆரோக்கியமான உணவுகளாகும். இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அதே சமயம் சர்க்கரையின் அளவும் மிகவும் குறைவாக உள்ளன. நட்ஸை மெல்லும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கிறது, மேலும், அவற்றில் உள்ள தாதுக்கள் பற்களின் எனாமலை வலுப்படுத்த உதவுகின்றன, இதனால் ஈறுகள் அதிக வலிமையுடனும் ஆரோக்கியமான தோற்றத்துடனும் காணப்படுகின்றன.
புரோட்டின் உணவுகள்
புரோட்டின் உடலின் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி பற்களையும் வலுப்படுத்துகிறது. உங்களுக்கு வலிமையான மற்றும் வெண்மையான பற்கள் வேண்டுமென்றால், முட்டை, சிக்கன் மற்றும் சால்மன் போன்ற மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை புரதச்சத்தையும் பாஸ்பரசையும் வழங்குகின்றன. ஒருவேளை நீங்கள் சைவ உனவை சாப்பிடுபவராக இருந்தால் டோஃபு மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். இவை பற்களின் அமைப்பைப் பராமரிக்கவும், அவற்றின் தோற்றத்தைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.
மொறுமொறுப்பான உணவுகள் மற்றும் காய்கறிகள்
ஆப்பிள், கேரட் மற்றும் செலரி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது எதிர்பார்ப்பதை விட நன்மைகளை அளிக்கும். இவை இயற்கையான பல் துலக்கிகள் போலச் செயல்படுகின்றன. இவற்றை மெல்லும்போது, பற்களின் மேற்பரப்பில் ஒட்டியிருக்கும் பிளேக் எனப்படும் கறைகளையும் உணவுத் துகள்களையும் அகற்ற இவை உதவுகின்றன. மேலும், இவற்றில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், இவை ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பற்களைத் தொற்று மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications

