Latest Updates
-
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ! -
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா -
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்! -
அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும் -
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும்
Karthigai Deepam Sepcial Milagu Jeeraga Adai Recipe in Tamil: தமிழர்களின் முக்கியப் பண்டிகையான கார்த்திகை தீபம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழாக்கள் என்றாலே பலகாரங்கள் இல்லாமல் எப்படி கொண்டாடுவது? எனவே கார்த்திகை தீபத்தின் போதும் வீட்டில் சில பலகாரங்களை அவசியம் செய்ய வேண்டும். இந்த கார்த்திகை தீபத்துக்கு கொஞ்சம் வித்தியாசமான பலகாரத்தை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த செட்டிநாடு மிளகு சீரக அடையை செய்யுங்க.

இந்த மிளகு சீரக அடை என்பது செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். இந்த மிளகு சீரக அடை என்பது தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத்தின் போது செய்யப்படும் பலகாரங்களில் முக்கியமானதாகும். இந்த மிளகு அடை செய்வதற்கு எளிதானது மற்றும் இதை சட்னி சாம்பாருடன் வைத்து இரவு உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷல் மிளகு சீரக அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு சீரக அடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் குதிரைவாலி அல்லது சாதாரண அரிசி
- ¼ கப் அவல்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் அரிசி அல்லது குதிரைவாலியை நன்றாகக் கழுவி, அதனுடன் ஒருமுறை கழுவிய அவலையும் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- முதலில் மிளகு மற்றும் சீரகத்தை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்; அதன் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஊறவைத்த அரிசியிலிருந்து நீரை வடித்துவிட்டு, அதனுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை மென்மையாக அரைக்கக் கூடாது, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பொடித்து வைத்த மிளகு மற்றும் சீரகத்தை மாவுடன் கலக்கவும். பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.
- சூடான தோசைக்கல்லின் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி தடிமனான அடையாக மாற்றவும்.
- ஒரு ஸ்பூன் நெய்யை அடையை சுற்றி ஊற்றி வேக விடவும். பின்னர் அடையை திருப்பி போட்டு இருபுறமும் நன்றாக வேக விடவும்.
- இருபுறமும் நன்றாக வெந்ததும் சூடான அடையை தட்டிற்கு மாற்றவும். இது பிரசாதமாகவும் படைக்கலாம் இல்லையெனில் சாம்பார், சட்னியுடன் வைத்து இரவு உணவாகவும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
