Latest Updates
-
அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும் -
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒருவருக்கு தவறான குரூப் இரத்தம் செலுத்தப்பட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? -
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. -
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்?
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்!
Karthigai Pournami 2026: ஜோதிடத்தின் படி கார்த்திகை மாத பௌர்ணமியானது மிகவும் மங்களகரமானதாகவும், ஏராளமான நற்பலன்களைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்து மதத்தின் படி, கார்த்திகை பௌர்ணமி நாளன்று பெருமாள், லட்சுமி தேவி மற்றும் சந்திர பகவானை முறையாக வழிபடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
அதுவும் இந்த பௌர்ணமி நாளில் தான் கார்த்திகை தீபம் தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடு முழுவதும் தீபங்களை ஏற்றுவதோடு, சிலர் விரதமிருந்து சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். அதோடு இந்நாளில் தானம் தர்மங்களையும் செய்வார்கள். இப்படி ஒரு சுப நாளில் தானங்களை செய்யும் போது, அது புண்ணியத்தை இன்னும் இரட்டிப்பாக்கும்.

ஜோதிடத்தின் படி, இந்த கார்த்திகை பௌர்ணமி நாளில் ஒவ்வொரு ராசிக்கேற்ப பொருட்களை தானம் செய்வது மங்களகரமான பலன்களைத் தரும். குறிப்பாக பண பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் மஙறறும் சந்திரன் தொடர்பான தோஷங்களின் தாக்கமும் குறைவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்று கார்த்திகை பௌர்ணமி. இப்போது கார்த்திகை பௌர்ணமி நாளன்று 12 ராசிக்காரர்களும் எந்தெந்த பொருட்களை தானம் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் அரிசி பாயாசம் செய்வது நல்லதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு, குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.
ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று தயிர் அல்லது நெய் போன்ற பொருட்களை தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதனால் வாழ்வில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் பால் அல்லது அரிசியை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்து வந்தால், அது நீங்கி நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகளையும் குறைப்பதாக நம்பப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று கற்கண்டு கலந்த பாலை தானம் செய்வது நல்ல பலனைத் தரும். இப்படி செய்வதனால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் செய்யும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று வெல்லத்தை தானம் செய்தால், கிரக நிலைகளால் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து, வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று அரிசி பாயாசத்தை தானம் செய்வது நல்லது. இவ்வாறு செய்தால் லட்சுமி தேவியின் ஆசி கிடைப்பதோடு, வீட்டிற்கு நல்ல மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் பால், அரிசி மற்றும் நெய் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இப்படி தானம் செய்வதனால், அது பெருமாளையும், லட்சுமி தேவியையும் மகிழ்விக்கும். இதன் மூலம் வாழ்வில் உள்ள பணப்பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று சிவப்பு நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால் பண பிரச்சனைகள் குறைந்து நிதி நிலைமை மேம்படும். மேலும் கிரகங்களின் மோசமான விளைவுகளும் குறைந்து, வாழ்க்கை செழிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் பருப்பு தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதனால் அது செழிப்பான இல்லத்தை உறுதி செய்து, வளத்தை நிலைநாட்டும்.
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று பொரியை வாங்கி தெப்ப குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கலாம். இப்படி செய்வதன் மூலம், அது வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளன்று ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலம் பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பௌர்ணமி நாளில் பிராமணர்களுக்கு உணவளிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்நாளில் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வதும், லட்சுமி தேவியை மகிழ்வித்து, வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
