Latest Updates
-
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும் -
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒருவருக்கு தவறான குரூப் இரத்தம் செலுத்தப்பட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? -
சரும வறட்சி அதிகமா ஏற்படுதா? அப்ப காய்ந்த ரோஜாப்பூ இதழை வெச்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. -
இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்? -
பொய் சொல்வதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு... உங்க ராசி எப்படி? -
சித்திரகுப்தர் எப்படி எமதர்மனின் உதவியாளராக மாறினார்? இறப்பிற்கு ஏன் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது தெரியுமா?
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். உங்கள் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய சில புதிய நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலையை திறமையாக முடிக்க பொறுமை மற்றும் தைரியம் அவசியம். அதனை உணர்ந்து காரியங்களை செய்யுங்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணருவீர்கள். உங்கள் நீங்கயே கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் சீரான முறையில் நடந்து கொண்டால் நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். வணிகர்கள் லாபம் ஈட்ட பெரிய வாய்ப்பைப் பெறலாம். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். முதலீடு செய்வதற்கு முன்பு, கவனமாக சிந்திக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. உங்கள் பிடிவாத குணம் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் சில முக்கியப் பொறுப்புகளைப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நேரத்திற்கு அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு தொழிலதிபர் மற்றும் பெரிய லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இன்று நீங்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
சிம்மம்
இன்று நீங்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் பொழுதுபோக்கிற்காக அதிக பணத்தை செலவிட வேண்டாம். அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பில் பங்கேற்கலாம். உங்கள் ஆலோசனைகள் இன்று மேலதிகாரியை பெரிதும் கவர்ந்திழுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடன் செய்ய முயற்சிக்கவும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
இன்று நீங்கள் ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். அலவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிகமாக புறம் பேச வேண்டாம். வியாபாரிகள் இன்று பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். காதல் விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். இருப்பினும்,புத்திசாலித்தனமாக செலவு செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலை அழுத்தம் அதிகமாக இருந்தால் அமைதியான மனதுடன் உங்கள் வேலையைச் செய்ய முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் நல்ல நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவில் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இன்று தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
இன்று நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க திட்டமிட்டால், சிந்திக்காமல் அதைச் செய்யாதீர்கள். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியுடன் முக்கியமான விவாதம் நடத்துவீர்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், சில காரணங்களால் உங்கள் பயணம் தள்ளிப் போகலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் நல்ல அறிகுறி தென்படும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் இன்று அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். குழந்தைகளைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். வணிகர்கள் நிதி விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
