Latest Updates
-
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா -
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்! -
அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும் -
டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒருவருக்கு தவறான குரூப் இரத்தம் செலுத்தப்பட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா?
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ!
Morning Sneezing In Tamil: காலையில் தூங்கி எழுந்தவுடன் தொடர்ந்து தும்மல் வருகிறதா? மூக்கில் இருந்து தண்ணீர் போல நீர் வடிவதுடன், கண்களிலும் அரிப்பு ஏற்படுகிறதா? ஆனால் காலை 10 மணிக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தானாகவே குறைந்துவிடுகிறதா? அப்படியானால், இது சாதாரண சளிப் பிரச்சனையாக இருக்காது. உங்களுக்கு அலர்ஜிக் ரைனிடிஸ் (Allergic Rhinitis) எனப்படும் மூக்கில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பு இருக்கலாம்.

தூசி, மகரந்தம், பூஞ்சை மற்றும் தூசிப் பூச்சிகள் போன்றவை இந்த அலர்ஜியைத் தூண்டக்கூடும். குறிப்பாக, இரவு முழுவதும் நாம் பயன்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளில் இருக்கும் தூசிப் பூச்சிகள் காலையில் ஏற்படும் தும்மலுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இதற்காகத் தொடர்ந்து அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
மேலும் காலையில் எழுந்ததும் சந்திக்கும் இந்த தொடர் தும்மலுக்கும், மூக்கில் இருந்து நீர் வடிதலையும் கட்டுப்படுத்த செய்ய வேண்டியவைகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:
1. உப்பு கலந்த தண்ணீரால் மூக்கைக் கழுவுங்கள்
"மூக்கில் படிந்திருக்கும் தூசி மற்றும் அலர்ஜியைத் தூண்டும் துகள்களை வெளியேற்ற உப்புத் தண்ணீர் உதவக்கூடும். இதற்காக சலைன் நாசல் ரின்ஸ் (Saline Nasal Rinse) முறையைப் பயன்படுத்தலாம். இது மூக்கில் ஏற்படும் எரிச்சல், அடைப்பு மற்றும் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
இதற்காகக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் அல்லது முறையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்டெரைல் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண குழாய் தண்ணீரை நேரடியாக மூக்கைக் கழுவப் பயன்படுத்தக்கூடாது. சரியான அளவில் உப்பு சேர்க்கப்பட்ட சலைன் கரைசலைப் பயன்படுத்துவது அவசியம்." என்று டாக்டர் கூறினார்.
2. தலையணை உறை, போர்வையை வாரம் ஒருமுறை துவையுங்கள்
"காலையில் எழுந்ததும் தும்மல் ஏற்படுவதற்கு படுக்கையறையில் இருக்கும் தூசிப் பூச்சிகள் முக்கியக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக, தலையணை, போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளில் இவை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வாரம் ஒருமுறை துவைத்து நன்றாக உலர்த்த வேண்டும். சாத்தியமான இடங்களில் துணிகளின் பராமரிப்பு வழிமுறைகளுக்கு ஏற்றவாறு 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் துவைப்பது தூசிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்." என்று டாக்டர் கூறினார்.
3. வீட்டிற்குள் புகை வருவதைத் தவிர்க்கவும்
"சமையல் புகை, ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவர்த்திச் சுருள் மற்றும் சிகரெட் புகை போன்றவை மூக்கின் உட்புறத்தை எரிச்சலடையச் செய்து அலர்ஜி அறிகுறிகளை அதிகரிக்கலாம்.
எனவே, சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவது நல்லது. பூஜை செய்யும்போது ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும். படுக்கையறையில் அதிக வாசனை கொண்ட பொருட்களையும் புகையை உருவாக்கும் பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
4. தரையைப் பெருக்குவதற்குப் பதிலாக ஈரத்துணியால் துடைக்கவும்
"வீட்டில் தரையை காய்ந்த துடைப்பத்தால் பெருக்கும் போது தூசிகள் காற்றில் பரவி மூக்கில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதற்குப் பதிலாக ஈரத்துணி அல்லது மாப் பயன்படுத்தி தரையைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், படுக்கையறையில் தூசி சேராமல் தினமும் சுத்தம் செய்வது அவசியம். தேவைப்பட்டால் HEPA ஃபில்டர் கொண்ட ஏர் பியூரிஃபையரையும் பயன்படுத்தலாம்." என்று டாக்டர் கூறினார்.
5. வெளியே சென்றுவிட்டு வந்ததும் உடைகளை மாற்றுங்கள்
"வெளியே செல்லும் போது காற்றில் இருக்கும் தூசி மற்றும் மகரந்தத் துகள்கள் உடை, முடி மற்றும் சருமத்தில் ஒட்டிக்கொள்ளலாம். எனவே, வீட்டிற்கு வந்ததும் முகம் மற்றும் கைகளைக் கழுவி, உடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பது அல்லது தலை மற்றும் முகத்தில் படிந்திருக்கும் தூசியைச் சுத்தம் செய்வது நல்லது. இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பொருத்தமான முகக்கவசம் அணிவதும் உதவும்." என்று டாக்டர் கூறினார்.
6. தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
"அலர்ஜிக் ரைனிடிஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியும் உதவக்கூடும். தொடர்ந்து எட்டு வாரங்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சிலருக்கு அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்காக நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். மொத்தத்தில் உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வது முக்கியம்." என்று டாக்டர் கூறினார்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
"காலையில் மட்டும் தும்மல் வருவது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. மூச்சுத்திணறல், மூச்சு விடும்போது விசில் சத்தம், மூக்கில் ரத்தம் வடிதல், காய்ச்சல், குழந்தைகளுக்கு அதிக குறட்டை அல்லது வாய்வழியாக மூச்சுவிடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும், தூக்கம், வேலை மற்றும் படிப்பைப் பாதிக்கும் அளவுக்கு அலர்ஜி இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வீட்டில் செய்யும் மாற்றங்கள் உதவினாலும், தேவையான சிகிச்சைக்கு மாற்றாக அவற்றைக் கருதக்கூடாது." என்றும் டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications
