Latest Updates
-
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! -
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ! -
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா -
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்! -
அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Venus Moon Conjunction In Libra 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுபவர் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். கடக ராசியின் அதிபதியான சந்திரன் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து பயணிப்பார். அந்த வகையில் சந்திரன் டிசம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்படி நுழையும் போது அந்த துலாம் ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணிப்பதால், சந்திரன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

ஜோதிடத்தில் காதல், செல்வம், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். அதே சமயம் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதுவும் இந்த சேர்க்கை டிசம்பர் தொடக்கத்திலேயே உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களுடன், அளவற்ற செல்வமும், வெற்றியும் கிடைக்கப் போகிறது. இப்போது டிசம்பர் மாத தொடக்கத்தில் நிகழும் சந்திர சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராச்ககாரர்களின் தைரியம், வீரம், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்க நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் குறையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். வியாபாரிகளுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மற்றும் ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆயினும் வேலையில் கவனம் செலுத்தினால் நல்ல வெற்றியைப் பெறலாம். குடும்பத்தைப் பொறுத்தவதை, வீட்டுச் சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
