அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Karthigai Deepam Special Panai Olai Kozhukattai Recipe In Tamil: கார்த்திகை தீபம் என்றாலே வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி பாரம்பரியமான பலகாரங்களைச் செய்து படைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக, இந்த திருநாளில் கொழுக்கட்டை, பொரி உருண்டை, அப்பம் போன்ற இனிப்புகள் பல வீடுகளில் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், வித்தியாசமான சுவையிலும் பாரம்பரிய மணத்திலும் செய்யக்கூடிய ஒரு சிறப்பான பலகாரம் தான் பனை ஓலை கொழுக்கட்டை. இது தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பாகும். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Karthigai Deepam Special Recipe How To Make Panai Olai Kozhukattai

உங்களுக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பனை ஓலை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 2 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* கருப்பு எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் - 5
* சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
* பொடித்த கருப்பட்டி - 1/4 கிலோ
* தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் அரிசி மாவை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வறுத்து ஒரு அகலமான தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதையும் வறுத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1/4 கப் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, அதையும் வறுத்த பொருட்களுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்து பொரிய விட்டு எடுத்து, வறுத்த பொருட்களுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் வறுத்த அனைத்து பொருட்களையும் கிளறி விட வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை வறுத்த பொருட்களுடன் சேர்த்து, அத்துடன் சுக்கு பொடியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டியை எடுத்துக் கொண்டு, அத்துடன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி, வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் நன்கு கிளிற விட வேண்டும்.
* அதன் பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து பனை ஓலை இலையை எடுத்து, அதை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு பனை ஓலையை எடுத்து, அதன் நடுவே சிறிது மாவை வைத்து பரப்பி மடித்துவிட்டு, அதன் மேல் மற்றொரு ஓலையை வைத்து மூடி, கட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பனை ஓலையில் வைத்து மடித்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தினுள் இந்த மடித்த ஓலைகளை வைத்து, 10-15 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 24, 2026, 15:44 [IST]
Desktop Bottom Promotion