Latest Updates
-
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்! -
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
நவம்பர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும்
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க..
Karthigai Deepam Special Chettinad Kandarappam Recipe In Tamil: கார்த்திகை தீப திருநாள் வரப்போகிறது. இந்நாளில் வீடெங்கும் தீபங்களால் அலங்கரிப்பது மட்டுமின்றி, கடவுளுக்கு பாரம்பரிய பலங்காரங்களை செய்து படைத்து வழிபாடு செய்வார்கள். அப்படி கார்த்திகை தீபத் திருநாளன்று செய்யக்கூடிய மிகவும் சிறப்பான ஒரு பாரம்பரிய செட்டிநாடு பலகாரம் தான் கந்தரப்பம்.

பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கந்தரப்பம், வெளிப்புறம் மொறுமொறுவென்றும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். குறிப்பாக, செட்டிநாடு பகுதிகளில் சுப நாட்கள் மற்றும் பண்டிகைகளின் போது இந்த பலகாரம் பெரும்பாலும் செய்யப்படுகிறது.
உங்களுக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கந்தரப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* மாவு பச்சரிசி - 1 டம்ளர்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்ல பாகுவிற்கு...
* பொடித்த வெல்லம் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
பிற பொருட்கள்...
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் மாவு பச்சரிசியை எடுத்துக்
கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அவற்றை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 2 மணிநேரம்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை மிக்சர்
ஜாரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் பொடித்த வெல்லத்தை எடுத்துக்
கொண்டு, அத்துடன் 1/4 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை
கரைத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி குளிர வைக்க
வேண்டும்.
* வெல்ல நீர் குளிர்ந்ததும், சிறிது வெல்ல நீரை ஜாரில் எடுத்துள்ள
பொருட்களுடன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1
சிட்டிகை உப்பு சேர்த்து, மீதமுள்ள வெல்ல நீரையும் சேர்த்து, தோசை
மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு
கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும்
பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான செட்டிநாடு
கந்தரப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
