Latest Updates
-
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ! -
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா -
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்! -
அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
நவம்பர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
மாளவ்ய ராஜயோகத்தால் அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்! -
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
தக்காளியுடன் இந்த பொருட்களை சேர்த்து பஞ்சாபி ஸ்டைல் தக்காளி சட்னி அரைங்க - வேற லெவலில் இருக்கும்
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது!
Karthigai Deepam 2026: திருக்கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானின் ஜோதி வடிவத்தைப் போற்றிக் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆன்மிகத் திருநாளாகும். குறிப்பாக, திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் இந்தத் தீபம், இறைவனின் அளவற்ற ஒளியையும் சக்தியையும் உணர்த்துவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதிலிருந்து மகா தீபத்திற்கான தீ எடுத்துச் செல்லப்பட்டு மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இந்தத் திருநாளில் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது மட்டுமின்றி, வீட்டிலும் அகல் விளக்குகள் ஏற்றி சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றும் போது ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தீபம் ஏற்றியும் எந்த பலனும் கிடைக்காது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
1. கார்த்திகை தீபத்திற்கு ஏற்கனவே வீட்டில் இருக்கும் பழைய அகல்விளக்குகளை பயன்படுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் சில புதிய அகல்விளக்குகளை வாங்க வேண்டும். அப்படி வாங்கும் புதிய அகல்விளக்குகளைக் கொண்டு அப்படியே தீபம் ஏற்றாமல், 3 மணிநேரம் நீரில் ஊற வைத்து எடுத்து காய வைத்து தான் ஏற்ற வேண்டும்.
2. கார்த்திகை தீபத்திற்கு ஒற்றை திரி ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தான் தீபம் ஏற்ற வேண்டும். இது தான் குடும்ப ஒற்றுமையையும், வீட்டிற்கு மங்களத்தையும் தரும்.
3. வீட்டில் ஏற்றும் ஒவ்வொரு விளக்கையும் தீக்குச்சியில் ஏற்றக்கூடாது. முதலில் பூஜை அறையில் எப்போதும் ஏற்றும் விளக்கை ஏற்றிய பின், ஒரு அகல்விளக்கை எடுத்து, அந்த விளக்கில் உள்ள தீயில் இருந்து ஏற்றி, பின் அவற்றைக் கொண்டு மற்ற எல்லா அகல் விளக்குகளையும் ஏற்ற வேண்டும்.
4. அகல் விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது. சிறியதாக பச்சரிசி மாவில் சிறிய கோலம் போட்டு அல்லது ஒரு பூ வைத்து அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும்.
5. விளக்குகளை வாயால் ஊதியோ அல்லது கையாலோ அணைக்கக்கூடாது. பூவைக் கொண்டு தான் தீயை அணைக்க வேண்டும்.
கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும்?
திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்டில் குறைந்தபட்சம் 27 அகல் விளக்குகள் ஏற்றுவது சிறப்பானது. இந்த 27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. இந்த 27 விளக்குகளையும் பின்வரும் இடங்களில் வைக்க வேண்டும்.
1. வீட்டு முற்றத்தில் 4 விளக்கு
2. சமையலறையில் 1 விளக்கு
3. முன் படிக்கட்டில் 2 விளக்கு
4. பின் படிக்கட்டில் 4 விளக்கு
5. திண்ணையில் 4 விளக்கு
6. மாடக்குழியில் 2 விளக்கு
7. நிலைப்படியில் 2 விளக்கு
8. சாமி படத்திற்கு கீழ் 2 விளக்கு
9. வெளியே எம தீபம் 1 விளக்கு
10. கோலமிட்ட இடத்தில் 5 விளக்கு
ஒருவேளை 27 விளக்குகளை ஏற்ற முடியாவிட்டால், 9, 11 என்ற எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றலாம்.
எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?
1. கிழக்கு திசை - கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்ற சிறந்த திசை இதுவாகும். இந்த திசையை நோக்கி தீபம் ஏற்றும் போது, அது துன்பங்களை நீக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும்.
2. வடக்கு திசை - வடக்கு திசை குபேரன் குடியிருக்கும் திசை என்பதால், இந்த திசையை நோக்கி தீபம் ஏற்றினால், செல்வ வளமும், அறிவும் பெருகும்.
3. மேற்கு திசை - மேற்கு திசையை நோக்கி விளக்கை ஏற்றும் போது, கடன் தொல்லைகள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும்.
4. தெற்கு திசை - வீட்டிற்குள் எப்போதும் தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது எமனுக்கு உரிய திசை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
