Latest Updates
-
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! -
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
காலையில் எழுந்ததும் தொடர்ந்து தும்மல் வருகிறதா? இதை கட்டுப்படுத்த டாக்டர் சொல்லும் 6 டிப்ஸ் இதோ! -
சிக்கன் மற்றும் முட்டை வாங்க நாடு கடந்து ரிஸ்க் எடுத்து செல்லும் சுவிட்சர்லாந்து மக்கள் - காரணம் என்ன தெரியுமா -
Karthigai Pournami 2026: இன்று உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும்!
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..!
Vastu Tips In Tamil: நம்மில் பலரும் அன்றாட வாழ்க்கையில் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஏதாவது ஒரு பொருளைக் கடனாக வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். சமையலுக்குத் தேவையான பொருட்கள் முதல் பணம், நகைகள் எனப் பலவற்றையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வோம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து கடனாக வாங்குவதையும், நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, சில பொருட்கள் வீட்டின் நேர்மறை ஆற்றல், செல்வ வளம் மற்றும் குடும்ப அமைதியுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. இவற்றை மற்றவர்களிடம் வாங்கிப் பயன்படுத்துவது அல்லது பிறருக்குக் கொடுப்பது துரதிர்ஷ்டத்தையும், நிதிப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அப்படியானால், வாஸ்துப்படி மற்றவர்களிடம் இருந்து ஒருபோதும் கடனாக வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன? எந்தப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
1. கைக்கடிகாரம்
பொதுவாக கைக்கடிகாரம் அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையின் வேகம் ஆகியவற்றின் சின்னமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கைக்கடிகாரத்தை மற்றவருக்கு கொடுப்பதோ அல்லது மற்றவர்களின் கடிகாரத்தை வாங்கி அணிவதோ அசுபமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, கைக்கடிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, உங்களின் ஆற்றலையும், நல்ல நேரத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பதாக அர்த்தம். அதேப் போல் மற்றவர்களின் கைக்கடிகாரத்தை வாங்கி அணிந்தால், அது அவர்களின் நல்ல அல்லது கெட்ட நேரம் உங்கள் வாழ்க்கைக்குள் நுழையக்கூடும். எனவே எப்போதும் இதை மற்றவர்களிடம் வாங்காதீர்கள்.
2. கைக்குட்டை
கைக்குட்டையை எப்போதும் நண்பர்களுக்கு பரிசாக கொடுக்கக்கூடாது, அப்படி கொடுத்தால் அது உறவை முறித்துவிடும் என்று சொல்வதை கேட்டிப்பீர்கள். கைக்குட்டையானது நல்ல மற்றும் கெட்ட அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. அதுவும் இது ஒருவரின் உணர்ச்சிகள் மற்றும் மனநிலையின் ஆற்றலை உள்வாங்கக்கூடியது. வாஸ்துப்படி கைக்குட்டையை மற்றவர்களிடம் இருந்து வாங்கி பயன்படுத்தும் போது, அது அந்நபரின் எதிர்மறை ஆற்றல் உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.
3. துடைப்பம்
பொதுவாக துடைப்பத்தை யாருக்கும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் துடைப்பம் லட்சுமி தேவி குடியிருக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவேளை கொடுத்தால், அது லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு செல்ல காரணமாகிவிடும். வேண்டுமானால் புதிய துடைப்பத்தை வாங்கிக் கொடுக்கலாமே தவிர, வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் துடைப்பத்தை மட்டும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னமாக கருதப்படுகிறது. இப்படியான துடைப்பத்தை மற்றவரிடம் இரவல் வாங்கி பயன்படுத்துவது, அவர்களின் வீட்டிலிருந்த எதிர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடும் மற்றும் இது பண பிரச்சனைகளையும் வீட்டில் அதிகரிக்கும்.
4. வெள்ளை நிற உணவுப் பொருட்கள்
வெள்ளை நிற உணவுப் பொருட்களானது அமைதியான ஆற்றலையும், செழிப்பையும் குறிக்கிறது. வாஸ்துப்படி, வெள்ளை நிற பொருட்களான பால், தயிர், உப்பு, சர்க்கரை, அரிசி போன்றவற்றை மாலை நேரத்தில் மற்றவர்களுக்கு கொடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. மாலை வேளையானது ஆற்றல் மாற்றம் ஏற்படும் நேரமாகும். எனவே இந்த உணவுப் பொருட்களை மாலையில் கொடுக்கும் போது, அது வீட்டின் செழிப்பைக் குறைத்து, நிதிப் பிரச்சனைகளை அதிகரிக்கும். வேண்டுமானால், இவற்றை பகல் வேளைகளில் கொடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
