Latest Updates
-
5 தக்காளி இருந்தா இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும் -
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க -
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..! -
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது!
ராகு-கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரு கிரகங்களும் ராசி மாறும்போது, அவை ஒருவரின் தொழில் வாழ்க்கை, வணிக வளர்ச்சி, நிதி நிலை, குடும்ப உறவுகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

2026-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி மாலை 4:34 மணிக்கு, ராகு-கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த கிரக மாற்றத்தின் போது ராகு மகர ராசியிலும், கேது கடக ராசியிலும் நுழைகின்றன. ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த கிரகப் பெயர்ச்சியின் தாக்கம் சுமார் 18 மாதங்களுக்கு நீடிக்கும். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல தடைகளை ஏற்படுத்துவதோடு, ஒருவரின் பொறுமையையும் சோதிக்கும் வகையில் அமையும். சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியின் போது மற்ற ராசிக்காரர்களை விட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, கேதுவின் பெயர்ச்சியானது குடும்ப உறவுகளையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இந்த நேரத்தில் சக ஊழியர்கள் அவர்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுக்கப்போகிறார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் அவர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகலாம், இது மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எதிர்பாராத செலவுகள் அவர்களின் சேமிப்பைப் பாதிக்கலாம் மற்றும் அவர்களை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளலாம்.
தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவற்றைத் தீர்க்க பொறுமை மற்றும் சரியான உரையாடல்கள் தேவை. சரியான திட்டமிடல் மற்றும் உறுதியுடன் இந்த சவால்களை சமாளித்து அவர்கள் வெளிவரலாம். கவனம் செலுத்துவதும், ஒழுக்கமாக இருப்பதும், எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் இந்த காலகட்டத்தை கடக்க மிகவும் அவசியம்.
தனுசு
இந்த ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு நிதி மற்றும் குடும்ப ரீதியான சவால்களை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம், மேலும், ஏதேனும் புதிய திட்டத்தில் முதலீடு செய்யத் தூண்டும் சூழல் ஏற்படலாம். அவசரப்பட்டு எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.
அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம்
ராகு மகர ராசிக்குள் நுழைவது அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், அதே சமயம் புதிய சவால்களையும் கொண்டு வருகிறது. நிதி சிக்கல்கள் தனிப்பட்ட உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும். உடல்நலத்தைப் பொறுத்தவரை, எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம், குறிப்பாக தற்போது நோய்களால் போராடுபவர்களுக்கு, அவர்களின் ஆரோக்கியம் மேலும் மோசமடையலாம். வீட்டில் எதிர்மறையான சூழல் நிலவலாம், இதனால் நீங்கள் விரக்தியடையலாம்.
தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம், இதன் விளைவாக பின்னடைவு ஏற்படலாம். பணியிடத்தில் மேலாதிக்கரிகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

