புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்..

Mercury Transit In Vishakam Nakshatra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் சுவாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

Mercury Transit In Vishakam Nakshatra On 25 November 2026 These Zodiac Signs Will See Progress In Their Career

இந்த புதன் நவம்பர் 25 ஆம் தேதி மதிய வேளையில் விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த புதனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.

அதுவும் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணவுள்ளனர். இதன் மூலம் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக முன்னேற்றத்தைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். குறிப்பாக வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காணும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்வில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது முன்னேற்றப் பாதையைத் திறக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அமைதியும், அன்பும் நிறைந்திருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு தங்கள் வேலையில் இருந்த பிரச்சனைகள் குறைந்து, நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக தொழிலதிபர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். இதன் மூலம் பண பிரச்சனைகள் குறையும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை திறம்பட சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். வீட்டிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும். இருப்பினும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு புன் நட்சத்திர பெயர்ச்சியானது சுபமானதாக கருதப்படுகிறது. தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகளை நன்கு யோசித்து விவேகமாக எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 25, 2026, 11:26 [IST]
Desktop Bottom Promotion