Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
5 தக்காளி இருந்தா இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும் -
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க -
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..! -
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
2026-ம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணத்தையும், வெற்றியையும் அள்ளித் தரப்போகுது!
Sun Transit In Sagittarius On 16 December 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். தற்போது சூரியன் விருச்சிக ராசியின் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். முக்கியமாக இது இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியாகும்.

குரு பகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். முக்கியமாக 4 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது 2026 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு, உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிட்டும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் திடீர் லாபம் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியைப் பெறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பேச்சால் பல முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்ங்கள் கிடைக்கலாம். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல செய்தியைப் பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
